தேசிய திரைப்பட விருது! சிறந்த தமிழ் படம் ராயன்! மெய்யழகன் திரைப்படத்திற்கு சிறப்பு விருது அறிவிப்பு!

  • சென்னை: 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 2024ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் சிறந்த தமிழ் படமாக ராயன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல மெய்யழகன் திரைப்படத்திற்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    சிறந்த ஒலி கலவைக்கான சிறப்பு விருது மெய்யழகன் திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கும் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    சிறந்த நடிகருக்கான தேசிய விருது கார்த்திக் ஆர்யன் (சந்து சாம்பியன்) மற்றும் மம்முட்டி (பிரமயுகம்) ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

    சிறந்த துணை நடிகைக்கான விருது: 'மித்யா' (கன்னடம்) படத்திற்காக ரூபஸ்ரீ வர்கடியும், 'மகாராஜா' (தமிழ்) படத்திற்காக சச்சனா நமிதாஸும் சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெறுகின்றனர்.

    சிறந்த திரைக்கதைக்கான விருதுகள்:

    சிறந்த திரைக்கதை - வசனம்: வெங்கி அட்லூரி ('லக்கி பாஸ்கர்' - தெலுங்கு)
    சிறந்த திரைக்கதை (தழுவல்): யோகேஷ் தேஷ்பாண்டே
    சிறந்த திரைக்கதை (அசல்): பண்ட்ரெட்டி சுகுமார் ('புஷ்பா 2')

    சிறந்த படத்தொகுப்பு: ஆர். கலைவாணன் ('அமரன்')

    Advertisement

    சிறந்த சண்டை இயக்கம்: 'மகாராஜா' (ஸ்டண்ட் இயக்குனர்: அனல் அரசு)

    சிறந்த தமிழ் திரைப்படம்: 'ராயன்'

    சிறந்த தெலுங்கு திரைப்படம்: 'கம்மிட்டி குரோலு'

    திரைப்படங்களுக்கான சிறப்பு அங்கீகாரம்: சுரேண் ஜி ('மெய்யழகன்' - ஒலி கலவை பொறியாளர்) மற்றும் தனுஷ் ('கேப்டன்') மில்லர்.

    முழுநீளத் திரைப்படப் பிரிவில் சிறப்பு அங்கீகாரம்

    'மெய்யழகன்' திரைப்படத்தின் ஒலி கலவை (Sound Mix) பொறியாளர் சுரேன் ஜி மற்றும் 'கேப்டன் மில்லர்' படத்திற்காக தனுஷ் ஆகியோருக்கு சிறப்பு அங்கீகாரம்.

    English Summary

    National Film Awards 2026: The 72nd National Film Awards have been announced. The awards for the year 2024 have been revealed; Raayan has been selected as the Best Tamil Film, and a special award has been announced for the film Meiyazhagan.