டெல்லி: தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் அடிக்கடி பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி தரும் வகையில், சலுகை கட்டணத்தில் வருடாந்திர பாஸ் வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் சுங்கச்சாவடியிலிருந்து 20 கிமீ சுற்றளவுக்குள் வசிக்கும் மக்கள் சலுகை கட்டணத்தில் வருடாந்திர பாஸ் பெற முடியும். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
சுங்கச்சாவடிகளுக்கு அருகே இருக்கும் வீடுகளில் வசிப்போருக்கு எப்போதுமே சிக்கல் தான். ஒவ்வொரு முறையும் ஆபீஸ் செல்லும்போது கூட அவர்கள் சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும். இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மத்திய அரசு புதிய வருடாந்திர பாஸை கொண்டு வந்துள்ளது.
அதன்படி சுங்கச்சாவடி அமைந்துள்ள இடத்தை பொறுத்து ஆண்டுக்கு ரூ.1,500 அல்லது ரூ.3,000 செலுத்தி இந்த வருடாந்திர பாஸ் பெற்று கொள்ளலாம். இந்த புதிய விதிகள் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் இதற்கு தேவையான விதிகளில் மாற்றம் செய்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியிலிருந்து 20 கிமீ சுற்றளவுக்குள் வசிக்கும் வாகன உரிமையாளர்கள் இந்த சலுகைக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும், அனைத்து வாகனங்களுக்கும் இந்த பாஸ் கிடைக்காது. பெர்சனல் பயன்பாட்டிற்காக, அதாவது ஒயிட் போர்ட் காரை வைத்திருப்போருக்கு மட்டுமே இந்த பாஸ் வழங்கப்படும். மேலும், அந்த வாகனங்களில் செல்லுபடியாகும் சரியான பாஸ்டேக் இருக்க வேண்டும். திருத்தப்பட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள பிற நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். முக்கியமாக இந்த வருடாந்திர பாஸ் குறிப்பிட்ட ஒரு சுங்கச்சாவடிக்காக மட்டுமே வழங்கப்படும். அதாவது உங்கள் வீடு அமைந்துள்ள சுங்கச்சாவடியை கடந்து செல்லும்போது மட்டுமே இது வருடாந்திர பாஸ் ஒர்க் ஆகும். நாட்டின் பிற சுங்கச்சாவடிகளுக்கு செல்லும்போது, வழக்கம் போலவே கட்டணம் செலுத்த வேண்டும். சுங்கச்சாவடி அமைந்துள்ள இடத்தை பொறுத்து வருடாந்திர பாஸ் கட்டணம் இரண்டு வகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகராட்சி அல்லது உள்ளூர் நகர எல்லைக்கு வெளியே உள்ள சுங்கச்சாவடிக்கு அருகே உங்கள் வீடு இருந்தால் ஆண்டுக்கு ரூ.1,500 செலுத்த வேண்டும். இந்த கட்டணங்கள் நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும். வாகன உரிமையாளர்கள் அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்தால் மட்டுமே இந்த பாஸ் கிடைக்கும். சில இடங்களில் இந்த வருடாந்திர பாஸ் திட்டம் பொருந்தாது என்பதையும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக Closed User Fee Collection System முறையில் எவ்வளவு தூரம் பயணிக்கிறீர்களோ அதற்கேற்ப மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ் சாலைகளில் இந்த சலுகை கிடைக்காது. அதேபோல் சம்பந்தப்பட்ட இடத்தில் சர்வீஸ் சாலை அல்லது மாற்று பாதை இருந்தாலும் இந்த சலுகையை பெற முடியாது. எனவே, சுங்கச்சாவடியிலிருந்து 20 கிமீ தொலைவுக்குள் வசிப்பதோடு இந்த நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால் மட்டுமே பாஸ் கிடைக்கும். அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியை பயன்படுத்துபவர்கள், இந்த புதிய விதிகளின் கீழ் அனைத்து நிபந்தனைகளையும் தங்கள் கார்கள் பூர்த்தி செய்கிறதா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும். அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டால் உங்களுக்கும் இந்த பாஸ் கிடைக்கும்.வருடாந்திர பாஸ்
யாரெல்லாம் வருடாந்திர பாஸ் பெறலாம்?
திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் அதிர்ச்சி! பாஸ்டேக் குளறுபடியால் அரசு பஸ்கள் தடுத்து நிறுத்தம்
கட்டணம் எவ்வளவு?
நகராட்சி அல்லது உள்ளூர் நகர எல்லைக்குள் உள்ள சுங்கச்சாவடி என்றால் ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்த வேண்டும்.பரனூர் சுங்கச்சாவடியில் மிகப்பெரிய ட்விஸ்ட்.. பாஸ்டேக் இல்லாவிட்டால்.. நம்பர் பிளேட் மாறினால் காலி
யாருக்கு இந்த பாஸ் கிடைக்காது?