இதுதாங்க திமுக.. சாலையில் இறங்கி போராடுவதோடு நிற்காமல்.. டெல்லியில் தரமான சம்பவம்!

  • டெல்லி: நாடு முழுக்க நீட் தேர்வு மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பான குளறுபடிகளுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர் மற்றும் பல்வேறு அமைப்புகளின் போராட்டக் குரல்கள் விண்னைப் பிளந்து கொண்டிருக்கின்றன.

    Advertisement

    தேசிய அளவில் மாணவர்கள் வீதியில் இறங்கித் தங்களின் எதிர்காலத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், மாநில உரிமைகளுக்காகவும் மாணவர்களின் நீதிக்காகவும் நாடாளுமன்றத்தில் சட்ட அமைப்பு ரீதியிலான போராட்டத்தை கையில் எடுத்துள்ளது திமுக.

    Advertisement

    இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையின் நிகழ்ச்சி நிரலில், திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன் தாக்கல் செய்துள்ள தனி நகர் உறுப்பினர் மசோதா வரிசை எண் 16-ல் பட்டியலிடப்பட்டுள்ளது.

    நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற விரும்புவதோடு, மாநிலங்களே தங்களுக்கான மருத்துவ மற்றும் பல் மருத்துவ சேர்க்கை நடைமுறைகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்கும் நோக்கில் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மசோதாவின் முதன்மை அம்சங்கள்

    நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா சட்டமானால், அதன்பின்னர் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்:

    இந்திய மருத்துவ ஆணையச் சட்டம் (National Medical Commission Act) மற்றும் பல் மருத்துவர்கள் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம், எந்தவொரு மாநிலமும் நீட் தேர்வில் இருந்து முழுமையாக விலகிக்கொள்ள சட்டப்பூர்வ உரிமை பெறுகிறது.

    Advertisement

    நீட் தேர்வுக்குப் பதிலாக, மாநில அரசுகள் தங்களின் சொந்தக் கொள்கைகள் மற்றும் பள்ளிப் படிப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கைக்கான சொந்த வழிமுறைகளை உருவாக்கிக் கொள்ளலாம்.

    பயிற்சி மையங்களுக்குச் செல்ல வசதியில்லாத ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி மீண்டும் எட்டக்கூடிய ஒன்றாக மாறும்.

    ஜனநாயக வழியில் இயங்கும் திமுக

    இன்றைய காலகட்டத்தில், நீட் தேர்வுக்கு எதிராக அல்லது மக்கள் பிரச்சனைகளுக்கு எதிராகப் புதியதாக உதயமாகும் சில அரசியல் கட்சிகள், சமூக வலைதளங்களில் ஒரே ஒரு 'ட்வீட்' போட்டுவிட்டுத் தங்களின் கடமை முடிந்துவிட்டதாகக் கருதி அமைதியாகி விடுகின்றன. ஆனால், மாநில உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் திராவிட முன்னேற்றக் கழகம், வெற்று அறிக்கைகளோடு நிற்காமல் முறையான ஜனநாயக மற்றும் சட்டப் பூர்வமான வழிகளைப் பின்பற்றி வருகிறது.

    Advertisement

    தமிழகச் சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி, ஆளுநரின் தடைகளைத் தாண்டி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி அழுத்தம் தருவது. உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ச்சியான சட்டப் போராட்டங்களை முன்னெடுப்பது.

    இப்போது, நாடாளுமன்ற மாநிலங்களவையில் தனி நகர் மசோதா கொண்டு வந்து, நாட்டின் மிக உயர்ந்த மன்றமான நாடாளுமன்றத்தில் விவாதப் பொருளாக மாற்றுவது.

    தேசிய தேர்வு முகமையின் (NTA) குளறுபடிகளால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள சூழலில், கல்வித் துறை மாநிலப் பட்டியலுக்குத் திரும்ப வேண்டும் என்ற குரல் இந்தியா முழுவதும் வலுத்து வருகிறது. இந்த நேரத்தில் திமுக எம்.பி பி. வில்சனின் இந்த மசோதா, தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாது, நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு கலங்கரை விளக்கமாக அமைந்துள்ளது.

    Advertisement

    அரசியல் களத்தில் வெறும் சலசலப்புகளையும் விளம்பர அறிக்கைகளையும் தாண்டி, நாடாளுமன்றத்தின் மூலமாகவே தீர்வுகாண முயலும் திமுகவின் இந்த நகர்வு, கவனம் பெற்றுள்ளது.

    English Summary

    NEET Exemption Bill Listed in Parliament: How DMK MP P. Wilson Led the Legal Battle