தர்மேந்திர பிரதான் ராஜினாமா விவகாரம்.. நாளை வரை அவகாசம் கேட்ட மத்திய அரசு.. சிஜேபி விளக்கம்!

  • டெல்லி: டெல்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு கிளப் வளாகத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகள் உடன் மத்திய அமைச்சர்கள் ஜேபி நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையும் போது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன் வைத்த நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு கொடுக்கவும், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது பதிவான வழக்குகளை திரும்ப பெறவும் மத்திய ஒப்புதல் தெரிவித்துள்ளதாக சிஜேபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தர்மேந்திர பிரதான் விவகாரத்தில் நாளை வரை மத்திய அரசு அவகாசம் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று சுமார் ஒரு மாதமாக காக்ரோச் ஜனதா கட்சியினர் போராடி வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு அதிகரித்து வருகின்றனர். மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற போது, நாடாளுமன்றக் கதவுகளை மூடும் நிலை உருவாகியது.

    Advertisement

    இவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளம. தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களிலும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. சினிமா பிரபலங்களும் ஆதரவு குரலை பதிவு செய்துள்ள நிலையில், கரப்பான் பூச்சி ஜனநா கட்சி பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது.

    டெல்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு கிளப் வளாகத்தில் இன்று 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகள் உடன் மத்திய அமைச்சர்கள் ஜேபி நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பாக 3 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    இதுதொடர்பாக சிஜேபி கட்சியின் பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், தர்மேந்திர பிரதான் ராஜினாமா விவகாரத்தில் சமரசத்திற்கு இடமில்லை என்பதை உறுதியாக கூறியுள்ளோம். தர்மேந்திர பிரதான் விவகாரத்தில் நாளை வரை மத்திய அரசு அவகாசம் கேட்டுள்ளது. அதேபோல் போராடி வரும் மாணவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யக் கூடாது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு கொடுக்கவும் மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்று தெரிவித்தனர். இதன்பின் ஜேபி நட்டா பேசுகையில், 3 கோரிக்கைகளையும், 5 சீர்திருத்த பரிந்துரைகளையும் அவர்கள் முன் வைத்துள்ளனர். நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    NEET Protest: Union Govt Accepts CJP 2 Demands and Seeks Time on Dharmendra Pradhan Issue