லட்டு மாதிரி சான்ஸ் கொடுத்த ராகுல்.. கப்புனு புடிச்ச பாஜக! நீட் மாணவர் போராட்டத்தில் புதிய திருப்பம்

  • டெல்லி: நீட் விவகாரம் இப்போது தேசியளவில் மிக பெரிய போராட்டமாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடக்கம் முதல் மவுனம் காத்து வந்த பாஜகவுக்கு தேவைப்பட்ட ஒரு வாய்ப்பை ராகுல் காந்தி கொடுத்துவிட்டார். மாணவர் போராட்டம் என்பதால் வாய் திறக்க முடியாமல் இருந்த பாஜக, இப்போது ராகுல் காந்தி போராட்டத்தை வைத்து அரசியல் காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளது.

    Advertisement

    நீட் கேள்வித்தாள் லீக் சர்ச்சை பெரிதாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலில் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டத்தை ஆரம்பித்தனர். நாட்டில் முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்திய கரப்பான் பூச்சி கட்சியினர் கடந்த மாதம் முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர்.

    Advertisement

    மாணவர் போராட்டம்

    இதில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கலந்து கொண்டு தனது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார். நாளுக்கு நாள் போராட்டத்திற்கான ஆதரவு அதிகரித்து கொண்டே போனது. அதிலும் கடந்த சனிக்கிழமை திடீரென போராட்ட களத்திற்கு வந்த டெல்லி போலீசார், வாங்சுக்கை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுவே போராட்டத்தை திருப்பி போட்டது. இந்தச் சம்பவத்திற்கு பிறகு மாணவர் போராட்டத்திற்கான ஆதரவு பல மடங்கு அதிகரித்தது.

    இந்தச் சூழலில் தான் கடந்த திங்கள்கிழமை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய போது, நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது. எதிர்பார்த்ததை காட்டிலும் மிக அதிகளவில் மாணவர்கள் திரண்டனர். அப்போது சில இடங்களில் எதிர்பாராத விதமாக தடியடி வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதில் மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் காயமடைந்தனர். மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு நாடு முழுக்க இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

    Advertisement

    காங்கிரஸ்

    மாணவர் மீதான தடியடியை கண்டித்து செவ்வாய்க்கிழமை காங்கிரஸும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தது. முதலில் டெல்லி போலீசார் நடந்து கொண்ட விதத்திற்கு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. அத்தோடு பிற்பகலில் திடீரென பிரதமர் இல்லத்திற்கு முன்பும் தர்ணா போராட்டத்தை ஆரம்பித்தது. இந்த போராட்டத்தை உளவு துறையே கூட எதிர்பார்க்கவில்லை. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது ராகுல் காந்திக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. இது தேசியளவில் பரபரப்பை கிளப்பியது.

    பாஜகவுக்கு கிடைத்த வாய்ப்பு

    அதேநேரம் மாணவர் போராட்டத்தில் அரசியல் சாயமும் ஏற்பட்டது. இதுவரை மாணவர் போராட்டத்தில் மவுனமாக இருந்து வந்த பாஜக, ராகுல் போராட்டத்திற்கு பிறகு அதை கையில் எடுத்துக் கொண்டது. பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்தி, பிரதமர் பாதுகாப்பை ராகுல் காந்தி குலைப்பதாக சொல்லி பாஜக சரமாரியாக குற்றஞ்சாட்டியது. மேலும், மாணவர் போராட்டத்தில் ராகுல் காந்தி அரசியல் செய்வதாகவும் விமர்சித்தது.

    Advertisement

    இதுதான் சரியான சான்ஸ்

    அத்தோடு நிற்காமல் ராகுல் காந்தியின் போராட்டத்திற்கு எதிராக போராட்டங்களும் அறிவிக்கப்பட்டன. நேற்றைய தினம் நாடு முழுக்க பல இடங்களில் ராகுல் காந்தி போராட்டத்தை கண்டித்து பாஜக போராட்டம் நடத்தியது. குறிப்பாக தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத், கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் இந்த போராட்டத்தின் போது மோதலும் கூட ஏற்பட்டது. அடுத்தகட்டமாக இப்போது டெல்லியிலும் இது எதிரொலிக்கிறது. ராகுல் போராட்டத்திற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்திலும் பாஜக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

    ராகுல் காந்தியின் போராட்டம் தேசியளவில் கவனத்தை பெற்று தந்தாலும் கூட, நிலைமையை சமாளிக்க அதுவே பாஜகவுக்கு ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. மாணவர் போராட்டம் என்பதால் அமைதி காத்து வந்த பாஜக, இதில் ராகுல் காந்தி உள்ளே வந்தவுடன், அந்த விஷயத்தை பிடித்து கொண்டுள்ளது.

    English Summary

    NEET paper leak protest has escalated into a major political battle(ராகுல் காந்தி போராட்டத்தால் டெல்லியில் மாறிய களம்): NEET students Protest Turns Political after Rhaul gandi protest.