தமிழர்கள் உள்பட 133 பேரின் கதி என்ன? நேபாளம் வெள்ளம் தொடர்பாக உதவி எண்கள் அறிவிப்பு

  • டெல்லி: நேபாளத்தில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தில் கைாலயா யாத்திரை சென்றவர்கள் உள்பட 133 இந்தியர்கள் சிக்கி உள்ளனர். இதில் 57 பேர் வரை தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்களின் நிலை என்னவென்று தெரியாமல் உள்ளது. இதனால் நேபாளம் சென்றவர்களின் குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர். இதற்கிடையே தான் மத்திய அரசு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.

    Advertisement

    நேபாளத்தில் போட்டிகோஷி ஆறு உள்ளது. இந்த ஆற்றில் தான் இன்று பெருவெள்ளம் ஏற்பட்டது. இந்த ஆற்றின் அருகே இருந்த ராட்சத பனிப்பாறை திடீரென்று உருகியதால் பெருவெள்ளம் ஏற்பட்டு இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    நேபாளத்தில் உள்ள நுவாகோட், தாடிங்க், ரசுவா மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏராளமானவர்களை வெள்ளம் அடித்து சென்றுவிட்டது. கட்டடங்கள், வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. பாலங்கள், ரோடுகள், நீர் மின்நிலையங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    இன்று இரவு 10 மணி நிலவரப்படி மொத்தம் 93 பேர் பலியாகி உள்ளனர். இந்தியர்கள் 133 பேர் உள்பட மொத்தம் 400 பேர் வரை மாயமாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கைலாய யாத்திரைக்கு சென்று வெள்ளத்தின் பிடியில் சிக்கி உள்ளனர். குறிப்பாக வெளிநாடுகளை சேர்ந்த 293 சுற்றுலா பயணிகள் சிக்கி உள்ளனர். தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் இருந்து மொத்தம் 57 பேர் நேபாளம் சென்ற நிலையில் அவர்களின் நிலை தெரியவில்லை.

    Advertisement

    இதனால் அவர்களின் குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆபத்து எதுவும் ஏற்பட்டு இருக்க கூடாது. அனைவரும் நலமாக வீடு திரும்ப வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்நிலையில் தான் நேபாளத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்க தேவையான நடவடிக்கையை மத்திய அரசு மூலமாக மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே தான் மத்திய அரசு சார்பில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தை பொதுமக்கள் 3 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி
    +977 985 131 6807
    +977 970 910 7500
    +977 981 032 6117
    இந்த 3 எண்களில் பொதுமக்கள் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ்அப்பில் அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதேபோல் வெள்ளப்பெருக்கால் சீனாவில் தன்னாட்சி பகுதியாக இருக்கும் திபெத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவின் இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. அதன்படி சீனா அதிகாரிகள் : 0086 139 8999 0012
    சீனா தலைநர் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம்: 0086 185 1428 4905 (வாட்ஸ்அப் வசதி உண்டு)
    நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் : +977 985 131 6807 / +977 970 910 7500 - (இரண்டிற்கும் வாட்ஸ்அப் வசதி உண்டு)

    English Summary

    Nepal Floods: 133 Indians, including pilgrims on the Kailash Yatra, are stranded following sudden floods in Nepal. It is reported that up to 57 of them are from Tamil Nadu. Their current status remains unknown, leaving their families in a state of distress. Amidst this situation, the Central Government has announced emergency helpline numbers.