மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்

  • டெல்லி: கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    சுமார் 40 நிமிடங்கள் வரை நீடிந்த இந்த சந்திப்பில், புதிய கட்சியை தொடங்குவது குறித்த தனது விருப்பத்தை அண்ணாமலை தெரிவித்திருப்பதாகவும், இது குறித்து விரிவாக ஆலோசித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    பாஜக முன்னாள் மாநில தலைவரான அண்ணாமலை, சமீப காலமாக கட்சியின் தலைமையால் தொடர்ந்து ஓரம் கட்டப்பட்டு வந்திருந்தார். குறிப்பாக அதிமுகவுடனான நல்ல ரேப்போவை கெடுத்ததே அண்ணாமலைதான் என்று கட்சியின் முக்கிய புள்ளிகள் அவருக்கு எதிராக தலைமைக்கு பற்ற வைக்க, கட்சியும் அவரை சைஸாக ஓரம் கட்டியது.

    இந்த சட்டமன்ற தேர்தலில் சீட்டு வாங்கிவிட வேண்டும் என்று எவ்வளவோ போராடி பார்த்தும், அண்ணாமலையால சீட் வாங்க முடியவில்லை. மட்டுமல்லாது ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோருக்கு தொகுதிகளை மாற்றி கொடுத்து ட்விஸ்ட் வைத்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால் வெற்றி வாய்ப்புகள் அப்படியே மங்கிவிட்டன. கடந்த தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வாக்கு சதவிகிதம் கிடைத்த நிலையில், இந்த தேர்தலில் ஒற்றை சதவிகிதத்தில் அது குறைந்தது.

    Advertisement

    இது எல்லாத்துக்கும் அண்ணாமலைதான் காரணம் என்று கட்சியின் முக்கிய புள்ளிகள் தேசிய தலைமையிடம் போட்டு கொடுக்க, அண்ணாமலை டென்ஷனின் உச்சத்திற்கு சென்றிருக்கிறார். தேர்தலிலும் சான்ஸ் கொடுக்கல, நான் சொல்றதையும் மதிக்கல, கட்சியிலும் எந்த முக்கியமான பொறுப்பும் இல்லை, சரி பெயருக்கு மாநிலங்களவை எம்பி என்கிற பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தும், அதுவும் கிடைக்கல.. அப்புறம் எதுக்கு நான் கட்சியில இருக்கனும்? என்று அப்செட் ஆன அவர் 2 நாள் பயணமாக டெல்லி சென்றிருந்தார்.

    அங்கு கட்சியின் தலைவர் நிதின் நபினை சந்தித்து ராஜினாமா லெட்டரை கொடுத்திருக்கிறார். அந்த கடிதத்தில் தமிழக பாஜகவில் நடக்கும் குளறுபடிகள், நயினார் நாகேந்திரன் மீதான குற்றச்சாட்டுகள், கட்சி தலைவர்களுக்கு இடையில் ஒற்றுமை இல்லாதது என மொத்தமாக லிஸ்ட் போட்டிருக்கிறார். சரி ஆனது ஆயிடுச்சு, கொஞ்சம் பொறுத்துக்கோங்க.. பார்த்து பண்ணிக்கலாம் என்று நிதின் நபின் சமாதானம் சொல்ல, அண்ணாமலை பிடிவாதமாக இருந்திருக்கிறார்.

    Advertisement

    இதனையடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மனக்குமுறலை கொட்டியிருக்கிறார். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அமித்ஷா, எல்லாத்தையும் சரி செய்யலாம், ராஜினாமா வேண்டாம் என்று சொல்ல.. அதையும் அண்ணாமலை கேட்கவில்லை. இதனையடுத்து இன்று பிரதமர் நரேந்திர மோடியை அண்ணாமலை சந்தித்து பேசியிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த சந்திப்பில் இரண்டு விஷயங்கள் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது அண்ணாமலையின் ராஜினாமாவை ஏற்று, புதிய இயக்கத்தை தொடங்கி அதை பாஜகவின் பி டீம் போல செயல்பட வைக்க, ஆர்எஸ்எஸ் தலைமை அண்ணாமலைக்கு அசைமெண்ட் கொடுக்கலாம். அல்லது, வேறு ஏதாவது பதவி தருகிறோம் என்று சொல்லி சமாதானம் பேசியிருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    இது எது நடந்தது என்பது குறித்து நாளை தெரிந்துவிடும். நாளை அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார். அந்த பேட்டியில் உண்மை தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Annamalai, the former BJP State President who had been camping in Delhi for the past two days, met with Prime Minister Narendra Modi today—on the occasion of his birthday—and received his blessings.