காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்!

  • சென்னை: நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது உங்களது ஃபாஸ்டேக் கணக்கில் போதுமான அளவு பணம் இருந்தும், டோல் பிளாசாக்களில் ஸ்கேன் ஆகாமல் அடிக்கடி தாமதம் ஏற்படுகிறதா? அதற்கு டோல் கேட் சிஸ்டம் காரணமல்ல.. உங்களது காரில் ஒட்டப்பட்டுள்ள ஃபாஸ்டேக் கார்டுதான் காரணம் எனத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

    Advertisement

    இந்திய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் முன்பு ரொக்கமாகச் செலுத்தப்பட்டு வந்த போது நீண்ட தாமதம் ஏற்பட்டது. இதைத் தடுக்கவே மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு பாஸ்டேக்கை அறிமுகம் செய்தது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கவே 2021 முதல் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டது. இப்போது நாடு முழுக்க அனைத்து வாகனங்களிலும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பாஸ்டேக்

    பாஸ்டேக்கில் பெரும்பாலும் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றாலும் ஆங்காங்கே சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. குறிப்பாகப் பலரும் ஃபாஸ்டேக் கணக்கில் போதுமான அளவு பணம் இருந்தும், டோல் பிளாசாக்களில் ஸ்கேன் ஆகாமல் அடிக்கடி தாமதம் ஏற்படுவதாகப் புகாரளிக்கிறார்கள். இது தொடர்பாகத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முக்கியமான விளக்கத்தைக் கொடுத்துள்ளது.

    சேதம்

    அதாவது கார்களின் கண்ணாடியில் ஒட்டப்படும் ஃபாஸ்டேக் கார்டுகள், நாளடைவில் சூரிய வெப்பம் மற்றும் தீவிர வானிலை மாற்றங்கள் காரணமாகத் தங்களின் கதிர்வீச்சுத் திறனை இழந்துவிடுகின்றன. இதன் காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்படுகிறதாம். மேலும், காரின் முன் கண்ணாடியை அடிக்கடி துடைப்பதாலோ அல்லது கடுமையான கெமிக்கல் கலந்த கிளீனர்களைப் பயன்படுத்துவதாலோ உள்ளே இருக்கும் ஆர்எஃப்ஐடி (RFID) சிப் சேதமடைகிறது.

    Advertisement

    மிகக் கடுமையான வெயில், பனி மற்றும் மழையில் கார் தொடர்ந்து பயணிக்கும் போது, கார்டின் ஒட்டும் தன்மை மற்றும் அதன் உள்ளே இருக்கும் சிப் பலவீனமடைகின்றன. பல ஆண்டுகள் தொடர்ந்து ஒரே கார்டைப் பயன்படுத்துவதால் ஏற்படும் இயற்கையான தேய்மானமும் இதற்கு முக்கிய காரணமாக மாறுகிறது.

    எப்போது மாற்ற வேண்டும்?

    உங்களது ஃபாஸ்டேக் கார்டு வாங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தால் உடனடியாக மாற்ற வேண்டும்.. டோல் கேட்களைக் கடக்கும்போது தொடர்ந்து 'ஸ்கேன் ஃபெயிலியர்' அல்லது தேவையற்ற தாமதங்களைச் சந்தித்தால் மாற்ற வேண்டிய நிலைமைக்கு கார்டு தேய்ந்துவிட்டது என்று அர்த்தம். உங்களது ஃபாஸ்டேக் பழுதடைந்தால் புதிய அக்கவுண்ட் தொடங்க வேண்டியதோ அல்லது புதிய செக்யூரிட்டி டெபாசிட் கட்ட வேண்டியதோ தேவையில்லை.

    Advertisement

    என்ன செய்ய வேண்டும்?

    • உங்களது ஃபாஸ்டேக் கார்டை எந்த வங்கி (அதாவது HDFC, ICICI, SBI) மூலம் வாங்கினீர்களோ, அந்த வங்கியின் அதிகாரப்பூர்வச் செயலி அல்லது போர்ட்டலுக்குள் நுழைய வேண்டும்.
    • அதில் 'Manage FASTag' அல்லது 'Replace Tag' என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, உங்களது வாகன எண் மற்றும் பழுதடைந்ததற்கான காரணத்தைக் குறிப்பிட வேண்டும்.
    • இதற்கு மிகக் குறைந்த அளவாக ₹100 முதல் ₹250 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

    புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கும் முன், பழைய கார்டை 'Block' அல்லது 'Hotlist' செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். புதிய கார்டு 5 முதல் 7 வேலை நாட்களுக்குள் உங்களது வீட்டிற்கே கொரியர் மூலம் வந்தடையும். அதன்பின் பழைய கார்டை அப்புறப்படுத்திவிட்டு, புதிய கார்ட்டை ஒட்டிக்கொள்ளலாம்.

    English Summary

    National Highways Authority of India issued new guidelines explaining that continuous FASTag scanning failures at toll plazas(பாஸ்டேக் தொடர்பாக மத்திய அரசு புதிய அறிவிப்பு): NHAI New Guidelines on FASTag Scan Failures.