STT வரி குறைய போகுது? நிர்மலா சீதாராமன் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. அடித்து தூக்கிய பங்குச்சந்தை

  • டெல்லி: கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வந்தது. இதற்கிடையே இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரிகள் தொடர்பாக சில முக்கிய கருத்துகளை கூறினார். அவர் அந்த கருத்துகளை கூறிய உடனேயே பங்குச்சந்தை உயர்ந்தது. அவர் அப்படி என்ன சொன்னார்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்!

    Advertisement

    டெல்லியில் நடைபெற்ற ப்ளூம்பெர்க் நியூ எகானமி ஃபோரம் என்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்தவர்களிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் அவர் ஈடுபட்டார். அப்போது STT எனப்படும் பங்குச்சந்தை பரிவர்த்தனை வரி தொடர்பாக சில கருத்துகளை குறிப்பிட்டார்.

    Advertisement

    நிர்மலா சீதாராமன்

    அதாவது இந்திய பங்குச்சந்தையில் பங்குகளை வாங்குவது, விற்பது தொடர்பான வரிகளை மறுபரிசீலனை செய்வது குறித்த கருத்துகளைக் கேட்க தயாராக இருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார். அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், இந்த விவாதங்களை கவனமாக கேட்க போவதாக அவர் கூறினார்.

    அவர் மேலும், "செக்யூரிட்டீஸ் டிரான்சாக்‌ஷன் டாக்ஸ் குறித்து நிறைய விவாதங்கள் நடைபெறுகின்றன. இது போன்ற விவாதங்கள் ஆரோக்கியமானவை. அவற்றை கேட்க தயாராக இருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார். எனினும், வரி விகிதங்களை குறைப்பது அல்லது முதலீட்டாளர்களுக்கு வரிச்சலுகை வழங்குவது குறித்து அவர் எந்தவொரு உறுதியும் அளிக்கவில்லை.

    Advertisement

    அதேநேரம் அவர் இப்படி சொன்னதால் பங்கு முதலீடு மீதான வரி விதிப்பு அணுகுமுறையை மத்திய அரசு மாற்றும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இன்று பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்தன.

    முதலீட்டாளர்கள் கவனம்

    பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் கவனம் இப்போது நீண்டகால மூலதன ஆதாய வரி (LTCG), பங்குச்சந்தை பரிவர்த்தனை வரி (STT) ஆகிய இரு வரிகள் மீது உள்ளது. ஒரு நிறுவனத்தின் பங்குகள் அல்லது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து ஓராண்டுக்கு பிறகு அதை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு எல்டிசிஜி வரி விதிக்கப்படுகிறது. அதேபோல பங்குச்சந்தை பரிவர்த்தனைகளுக்கு எஸ்டிடி வரி தனியாக விதிக்கப்படுகிறது.

    Advertisement

    தற்போதைய விதிகளின்படி, நீண்டகால முதலீடுகளின் மூலதன ஆதாயங்களுக்கு 12.5% வரி விதிக்கப்படுகிறது. ஒரு நிதியாண்டில் ரூ.1.25 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு மட்டும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. 2024 ஜூலை பட்ஜெட்டில் எல்டிசிஜி வரி 10%லிருந்து 12.5%ஆக உயர்த்தப்பட்டது. வரிவிலக்கு வரம்பும் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.25 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. 2026 பட்ஜெட்டில் இந்த வரி அமைப்பு மாற்றப்படவில்லை. அதே நேரத்தில், ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் பரிவர்த்தனைகளுக்கான எஸ்டிடி உயர்த்தப்பட்டது.

    எகிறிய மார்கெட்

    ஆனால், மத்திய அரசு இதன் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே அதிகரித்தது. இந்தச் சூழலில் தான் நிர்மலா சீதாராமன் இன்று வரி குறித்து சில கருத்துகளை குறிப்பிட்டார். அவர் அதை சொன்னவுடனேயே இந்திய பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்தன. கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தன.

    Advertisement

    முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பது என்ன?

    எல்டிசிஜி மற்றும் எஸ்டிடி ஆகிய இரு வரிகளும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சிக்கலை தருவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஏற்கனவே இந்திய சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சமீப மாதங்களில் வெளியேறி வருகிறார்கள். இந்த நேரத்தில் எல்டிசிஜி வரி குறைக்கப்பட்டாலோ, வரிவிலக்கு வரம்பு உயர்த்தப்பட்டாலோ, எஸ்டிடி வரி மாற்றப்பட்டாலோ அது முதலீடுகளை அதிகரிக்கவே செய்யும்!

    English Summary

    Indian stock markets rallied after Finance Minister Nirmala Sitharaman said about STT(பங்குச்சந்தை வரி குறித்து நிர்மலா சீதாராமன்): Nirmala Sitharaman STT Remarks latest news in tamil.