நீட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகள்.. பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்! தர்மேந்திர பிரதான் உருக்கம்!

  • டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்த முறைகேடுகள் ஆகியவற்றிற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாகத் தப்ப முடியாது என்றும், இதற்காக மாணவர்களிடம் மத்திய அரசு பகிரங்கமாக மன்னிப்பு கோருவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார்.

    Advertisement

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிபிஎஸ்இ தேர்வு நடைமுறைகளில் ஒரு தனியார் நிறுவனத்திற்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார். மட்டுமல்லாது தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இப்படி இருக்கையில் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

    Advertisement

    இது குறித்த இந்தியா டுடே செ்யதி ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டியளித்த தர்மேந்திர பிரதான், "இந்த முறைகேடுகளில் எந்தவொரு தனியார் நிறுவனமோ, சிபிஎஸ்இ-க்குள் இருக்கும் அதிகாரிகளோ, கல்வித் துறைக்கு வெளியே உள்ளவர்களோ அல்லது அரசுக்குள்ளேயே இருக்கும் நபர்களோ யாராக இருந்தாலும் சரி... தவறு நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; யாரையும் இந்த அரசு தப்பிக்க விடாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    என்ன நடந்தது?

    மே 3-ஆம் தேதி நடந்த நீட் தேர்வின் வினாத்தாள்கள் மாதிரி வினாத்தாள் என்ற பெயரில் முன்கூட்டியே கசிந்தது விசாரணையில் உறுதியானது. இதனால் தேர்வு ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படவுள்ளது.

    Advertisement

    கடந்த 2024ம் ஆண்டு வினாத்தாள் கசிவுப் பிரச்சனைக்குப் பிறகு அமைக்கப்பட்ட 'ராதாகிருஷ்ணன் கமிட்டி' அளித்த 70-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை அரசு அமல்படுத்திய பிறகும், இந்த ஆண்டு தவறு நடந்துள்ளது வருத்தமளிப்பதாக அமைச்சர் ஒப்புக்கொண்டார்.

    வரும் ஜூன் 21 மறுதேர்வை 100% தவறுகளே இல்லாத வகையில் நடத்தப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. மேலும், பாதுகாப்பை பலப்படுத்த அரசு கல்வி நிறுவனங்களையே தேர்வு மையங்களாக மாற்ற மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு பணியாற்றி வருகிறது.

    English Summary

    Dharmendra Pradhan: Union Education Minister Dharmendra Pradhan has stated that whoever is responsible for the NEET question paper leak and the irregularities in CBSE answer sheet evaluation will certainly not escape punishment, and that the Central Government has no alternative but to publicly apologize to the students for these incidents.