இனி பெட்ரோல் தேவையில்லை... கார், பைக்குகளில் 100% எத்தனால் பயன்படுத்தலாம்.. நிதின் கட்கரி அறிவிப்பு

  • டெல்லி: நம் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலில் தான் பைக், கார்கள் இயங்கி வருகின்றனர். இனி பெட்ரோல் தேவையில்லை. அதற்கு பதிலாக 100 சதவீதம் எத்தனால் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதற்கான கோப்பில் கையெழுத்திட்டுள்ள அவர் 100 சதவீத எத்தனால் பயன்பாட்டால் கிடைக்கும் பலன்கள் பற்றி விளக்கி உள்ளார்.

    Advertisement

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2024ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக உள்ளார். இப்போது 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். நம் நாட்டில் அதிக நாட்கள் தொடர்ந்து பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    Advertisement

    இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 12 ஆண்டு கால ஆட்சியை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது:

    ''நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் வாகனங்களில் 100% எத்தனாலை (இதற்கு முன் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்டது) எரிபொருளாக பயன்படுத்த சட்டப்பூர்வ அனுமதி அளிப்பதற்கான விதிகளை இறுதி செய்யும் கோப்புகளில் கையெழுத்திட்டேன். பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக உள்நாட்டிலேயே அதிக எரிபொருளை உற்பத்தி செய்வதை நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்தியாவில் 100 சதவீத எத்தனால் எரிபொருளுக்கு (E100) முழு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது வாகனங்கள் முழுமையாக எத்தனாலில் இயங்குவதற்கு வழிவகுக்கும். இந்த அனுமதியின் மூலம் எத்தனால், பெட்ரோலுக்கு மாற்றாக உருவெடுக்கும்.அதோடு நாட்டில் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும். ஆண்டுக்கு 22 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதி குறையும்.

    எத்தனால் பயன்பாட்டை ஊக்குவிக்கும் தனது முயற்சிக்கு ஆரம்பத்தில் பல எதிர்ப்புகளும் தவறான பிரச்சாரங்களும் வந்தது. ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து, தனது ஜீப் பழுதடைந்துவிட்டதாகக் கூறினார். மெக்கானிக்கிடம் சென்றபோது, எத்தனால் கலந்த எரிபொருளைப் பயன்படுத்தியதால் தான் வண்டி பழுதடைந்தது என்று அவர் கூறியதாக தெரிவித்தார்.

    Advertisement

    நான் அவரிடம், உங்களது கார் பெட்ரோலில் இயங்குகிறதா அல்லது டீசலிலா என்று கேட்டேன். அது டீசல் வண்டி என்றார். நான் கூறினேன், நாங்கள் டீசலில் எத்தனாலை கலப்பதே இல்லை, பிறகு அது எப்படி பழுதடையும்?' இதனால், எத்தனால் குறித்து தவறான கருத்துக்களை பரப்ப பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அதனை கடந்துவிட்டோம்.

    மேலும் இருசக்கர வாகனங்கள் உட்பட பல நிறுவனங்கள் விரைவில் 100 சதவீத எத்தனால் வாகனங்களை அறிமுகப்படுத்தும். 100 சதவீத எத்தனாலில் இயங்கும் மாருதி சுசுகி வேகன்ஆர் ஃபிளெக்ஸ்-எரிபொருள் மாடலை நான் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளளேன். மேலும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 3 மாடல்கள் உட்பட பல புதிய பைக்குகளும் இதில் அடங்கும். "அடுத்த இரண்டு மாதங்களில் டொயோட்டா, சுசுகி மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களும் 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்தும்'' என்றார்.

    Advertisement

    வாகனங்களின் எரிபொருட்களில் எத்தனால் கலப்பது என்பது பல நாடுகளில் 5 முதல் 10% என்ற அளவில் தொடங்கி, படிப்படியாக 20% (E20) ஆக அதிகரித்துள்ளது. பிரேசில் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் E85 (85% எத்தனால்) போன்ற உயர்தர எத்தனால் எரிபொருள்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது, இந்தியா 100% எத்தனால் எரிபொருளுக்கு (E100) சட்டப்பூர்வ ஒப்புதல் அளித்து ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.

    சாலையில் உள்ள பெரும்பாலான பழைய கார்கள் இந்த E100 எரிபொருளுக்குப் பொருந்தாது என்றாலும், மாருதி சுசுகி, ஹீரோ மோட்டோகார்ப், டொயோட்டா, சுசுகி மற்றும் ஹூண்டாய் போன்ற முன்னணி நிறுவனங்கள் E100-இல் இயங்கக்கூடிய ஃபிளெக்ஸ்-எரிபொருள் (flex-fuel) வாகனங்களை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளன. இதனால் இந்த திட்டம் அந்த கார்களின் சேல்ஸை உயர்த்தும். என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Union Minister Nitin Gadkari has officially granted legal approval for 100% ethanol-based fuel (E100) in India. This strategic move aims to reduce the nation's reliance on imported fossil fuels while encouraging automotive giants like Maruti Suzuki and Hero MotoCorp to expand production of flex-fuel vehicles, signaling a new era for indigenous energy.