எங்களை யாரும் மிரட்ட முடியாது.. திட்டவட்டமாக சொன்ன உச்சநீதிமன்றம்! ராகுல் காந்தி வழக்கில் பரபரப்பு

  • டெல்லி: வாக்காளர் பட்டியலில் இருந்து பெருமளவில் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டி ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் தாக்கல் செய்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது. அப்போது வழக்கு விசாரணையில், "எங்களை யாரும் மிரட்ட முடியாது" என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

    Advertisement

    வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டது மற்றும் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக இப்போது பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். குறிப்பாக ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் தாக்கல் செய்த வழக்குகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    Advertisement

    உச்ச நீதிமன்றம்

    தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேநேரம் உச்ச நீதிமன்றத்தை நோக்கி நடைபெற்ற ஜனநாயகத்திற்கான பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்றது தொடர்பாகவும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    மிரட்ட முடியாது

    SIR நடவடிக்கைக்கு எதிராக ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதனை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, ராகுல் காந்தி தனது செயல்பாடு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டார். அவர் மேலும், "எங்களை யாரும் மிரட்ட முடியாது. நாங்கள் எதுவும் தெரியாத இடத்தில் அமர்ந்திருக்கவில்லை. நீதிமன்றத்துக்கு உள்ளேயும் வெளியிலும் கூறப்படும் கருத்துகள் குறித்து எங்களுக்குத் தெரியும்" என்றும் அவர் தெரிவித்தார்.

    Advertisement

    SIR நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் நீக்கங்கள் மற்றும் திருத்தங்களை ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியுள்ளனர். துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் அந்த குழுவில் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வழக்கில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் SIR நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கோரிக்கை

    மேலும், உரிய முன்னறிவிப்பும் விளக்கம் அளிக்க நியாயமான வாய்ப்பும் வழங்காமல் எந்தவொரு வாக்காளரின் பெயரையும் பட்டியலில் இருந்து நீக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SIR நடவடிக்கையில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை வாக்குச்சாவடி வாரியாக வெளியிட வேண்டும் என்றும் ஒவ்வொரு பெயரும் நீக்கப்பட்டதற்கான காரணங்களையும் தெரிவிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

    Advertisement

    நீக்கப்பட்டவர்களின் வயது, பாலினம் உள்ளிட்ட விவரங்களை வெளியிடுவதுடன், அவர்களின் பெயர்களை மீண்டும் சேர்ப்பதற்கான வழிமுறைகளை அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 2025 ஜூன் 24ம் தேதி நாடு தழுவிய SIR நடவடிக்கையை தொடங்க எடுக்கப்பட்ட முடிவின் சட்டபூர்வ தன்மையையும் மனுவில் கேள்வி எழுப்பி இருந்தனர்.

    மனுதாரர்கள் வழக்கு

    ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியின் சுப்ரியா சுலே, சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியின் சஞ்சய் ராவத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா உள்ளிட்டோர் மனுவில் இடம்பெற்றுள்ளனர்.

    Advertisement

    இந்திய தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். தலைமை தேர்தல் ஆணையர் மீது மட்டுமே வழக்கு என்றாலும் சட்ட காரணங்களுக்காக பிற தேர்தல் ஆணையர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் அளிக்கும் பதில்களை பொறுத்தே அடுத்தகட்ட விசாரணை இருக்கும்.

    English Summary

    Supreme Court has issued notices to the Election Commission and the Centre on petitions challenging(தேர்தல் ஆணைய வழக்கு உச்ச நீதிமன்றம்): Rahul Gandhi SIR Petition latest news in tamil.