எல்லா சட்டசபை தேர்தலையும் நிறுத்தணும்.. மத்திய அரசுக்கு, கரப்பான் பூச்சி கட்சி 3 முக்கிய கோரிக்கைகள்

  • டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடி தொடர்பான இன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பத்திரிகையாளர்களை சந்தித்தது. இந்த சமயத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா மட்டுமின்றி, அனைத்து சட்டசபை தேர்தல்களையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 முக்கிய கோரிக்கைகளை அந்த கட்சி முன்வைத்துள்ளது. இது மத்திய அரசுக்கு சிக்கலாக மாறி உள்ளது.

    Advertisement

    டெல்லியில் இன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்ட விவகாரம் பற்றி பேசி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    Advertisement

    ஞானேஷ் குமார் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார். அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ராஜினாமாவிற்கு 48 மணிநேரம் கெடு வழங்கி உள்ளதோடு, இல்லாவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி வார்னிங் செய்துள்ளது.

    இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ் 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். ''1.தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். 2.ஞானேஷ் குமாருக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். 3. நடைபெற உள்ள அனைத்து சட்டசபை தேர்தல்களையும் நிறுத்தி வைக்க வேண்டும்'' என்ற 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறினார்.

    Advertisement

    அதுமட்டுமின்றி, மேலும் சவுரவ் தாஸ் கூறுகையில், '' 'சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையை 2025ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் நிலைக்கு மாற்ற வேண்டும். 'சார்' நடைமுறை சார்ந்த ஆவணங்களை உச்சநீதிமன்றம் தலைமையிலான குழுவின் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் ஆணையர்களை நியமனம் தொடர்பான சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்'' என்றும் கோரிக்கை வைத்தார்.

    முன்னதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே கூறியதாவது: ''2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையை பெறத் தவறிவிட்டது. இதனால் அவர்கள் பதற்றம் அடைந்தனர். நாட்டின் மனநிலை மாறுவதையும், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே, என்சிபி, ஸ்டாலின், பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால் அல்லது மம்தா பானர்ஜி எனப் பிராந்திய சக்திகள் வலுவாக உருவெடுப்பதையும் உணர்ந்தனர்.

    Advertisement

    இதனால் இந்த முதலமைச்சர்கள் குறிவைக்கப்பட்டு ஒவ்வொன்றாக தோற்கடிக்கப்பட்டனர். இது வெறும் தற்செயலான நிகழ்வாக இருக்க முடியாது. இதில் தெளிவான திட்டம் உள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் தொகுதியில் 50,000 வாக்குகள் நீக்கப்பட்டன. அவர் சுமார் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

    முக ஸ்டாலினின் தொகுதியில் 1,00,000 வாக்குகள் நீக்கப்பட்டன. அவர் சுமார் 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தொகுதியிலிருந்து 40,000 வாக்குகள் நீக்கப்பட்டன, அவர் 4,000 முதல் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

    பினராயி விஜயன் வெற்றி பெற்று எம்எல்ஏவானாலும் கூட கேரளாவில் வாக்குகள் நீக்கப்பட்டதால் ஆட்சியை இழந்தார். அவரால் மீண்டும் முதல்வராக முடியவில்லை. வலுவான எதிர்க்கட்சி தலைவர்களை ஒழிப்பதற்காகவே இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டதா? என்ற சந்தேகம் உள்ளது.

    Advertisement

    எங்களுக்கு எதிர்க்கட்சியின் மீதோ அல்லது ஏதேனும் குறிப்பிட்ட கட்சியின் மீதோ எந்தவொரு தனிப்பட்ட ஈடுபாடும் இல்லை. ஆனால் ஒரு ஜனநாயகத்தில், எதிர்க்கட்சி முழுவதையும் ஒழித்துக்கட்டினால் அதன்பிறகு எப்படி ஜனநாயகம் என்று அழைக்க முடியுமா? அது ஒரு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலாக இருக்குமா? இதுதான் எங்களின் கேள்வியாக உள்ளது'' என்று கொந்தளித்தார்.

    English Summary

    Cockroach Janta Party co-convenor Saurav Das laid out 3 demands - the resignation of the CEC, criminal proceedings against Gyanesh Kumar and those who allegedly directed him, and a freeze on all upcoming elections.