உலகின் மிக பெரிய ஏஐ சிப் நிறுவன CEOஐ கள்ள உறவில் காலி செய்த சீன உளவாளி? யார் இந்த ஆலிஸ்

  • வாஷிங்டன்: உலகின் முன்னணி ஏஐ சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் சிஇஓ ஜென்சன் ஹுவாங், சீன பெண் தொழிலதிபர் ஆலிஸ் ஹுவாங்குடன் திருமணத்தை மீறி தொடர்பு வைத்திருந்தது தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. ஜென்சன் ஹுவாங் கள்ள உறவில் இருந்தார் என்றால் அது குடும்ப விவகாரம்.. அது ஏன் சர்வதேச அளவில் பேசுபொருளாகிறது என்ற சந்தேகம் பலருக்கும் வரலாம். இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    இன்றைய காலகட்டத்தில் ஆயுதங்களுக்கு இணையாக அறிவுசார் தொழில்நுட்பங்களும் முக்கியமானதாக மாறி வருகிறது. இந்த சூழலில் தான் உலகின் முன்னணி ஏஐ சிப் நிறுவனமான என்விடியாவின் சிஇஓ ஜென்சன் ஹுவாங் சீன தொழிலதிபர் ஆலிஸ் ஹுவாங்குடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்தது பேசுபொருளாகியுள்ளது.

    Advertisement

    கள்ள உறவு

    ஏனென்றால் இந்த ஆலிஸ் ஹுவாங்கும் சீன உளவுத்துறைக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. சீன உளவு ஆபரேஷனின் ஒரு பகுதியாக ஜென்சனுடன் ஆலிஸ் நெருக்கமாக இருந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக என்விடியா நிறுவனத்தின் இயக்குநர் குழு விசாரணையை தொடங்கியதை தொடர்ந்து, ஜென்சன் ஹுவாங் தனது கள்ள உறவை ஒப்புக்கொண்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

    யார் இந்த ஆலிஸ் ஹுவாங்?

    63 வயதான தைவானில் பிறந்த ஜென்சன் ஹுவாங்குக்கும் ஆலிஸ் ஹுவாங்குக்கும் குடும்ப ரீதியாக எந்த தொடர்பும் இல்லை. மெகாஸ்பீட் என்ற நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரியான ஆலிஸ் ஹுவாங் சீனாவை சேர்ந்தவர். இவரது இன்னொரு பெயர் ஹுவாங் லே.

    Advertisement

    அவர் முன்பு தொலைக்காட்சி செய்தியாளராக பணியாற்றியுள்ளார். ஹுனான் டிவி, சீன அரசு தொலைக்காட்சியான சிசிடிவி ஆகியவற்றில் பணியாற்றி இருக்கிறார்.. பின்னர் எச்எஸ்பிசி வங்கியின் உயர் அதிகாரிக்கு உதவியாளராகவும், சிஐடிஐசி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தில் துணை தலைவராகவும் பணியாற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆனால், அவரது இந்த முந்தைய பணிகள் குறித்த விவரங்களிலும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஹுனான் டிவி நிறுவனத்தில் வேலை செய்த ஓர் அதிகாரி, தான் ஆலிஸ் ஹுவாங் என்ற பெயரை கேள்விப்பட்டதே இல்லை என்று கூறியதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. சிசிடிவி இணையதளத்திலும் அவரை பற்றிய பயோ கூட எதுவும் இல்லையாம்.

    Advertisement

    தொடர்பு ஏற்பட்டது எப்படி?

    2024 ஜூன் மாதம் தைவானின் தைபேயில் உள்ள ஒரு மதுபான விடுதியில் ஜென்சன் ஹுவாங்குக்கு அருகில் ஆலிஸ் ஹுவாங் அமர்ந்திருந்த போட்டோ முதன்முதலில் வெளியானது. அப்போது ஜிகாபைட், நெட்தண்டர் நிறுவனங்களின் நிர்வாகிகளும் உடனிருந்தனர். இதே காலகட்டத்தில் மெகாஸ்பீட் நிறுவனம் பல பில்லியன் டாலர் மதிப்பிலான மேம்பட்ட AI சிப்களை வாங்க தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

    அமெரிக்க அதிகாரிகள்

    2025 மே மாதம் தைபேயில் உள்ள உணவகம் ஒன்றுக்கு வெளியே ஜென்சன் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னால் ஆலிஸ் ஹுவாங் நின்றிருந்ததாகவும் போட்டோ வெளியானது. இதுவே அமெரிக்க அதிகாரிகளுக்கு முதல் சந்தேக மணியை அடித்திருக்கிறது. அதன் பிறகு அமெரிக்க அதிகாரிகள் மெல்ல விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

    Advertisement

    ஆலிஸ் ஹுவாங் மூலம் ஜென்சன் ஹுவாங்கை பற்றிய தகவல்களை சீன உளவு துறை சேகரித்துள்ளதாம். மேலும், என்விடியா நிறுவனத்திடம் அதிநவீன ஏஐ சிப்கள் இருந்த நிலையில், அதை சீனாவுக்கு விற்க சம்மதிக்க வைப்பதிலும் ஆலிஸ் ஹுவாங் - ஜென்சன் உறவே காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    வர்த்தகம்

    அமெரிக்கா ஏற்கெனவே சீனாவுக்கு அதிநவீன என்விடியா சிப்களை விற்பனை செய்வதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, ஜோ பைடன் ஆட்சியில் இந்த கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு, சீனாவுக்கான சிப் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தவர் தான் இந்த ஜென்சன் ஹுவாங். இந்தச் சூழலில், ஆலிஸ் ஹுவாங் உடனான கள்ள உறவு எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

    Advertisement

    கடந்த இரண்டு ஆண்டுகளில் மெகாஸ்பீட் நிறுவனம் 4.8 பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்பிலான என்விடியா சிப்களை வாங்கியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதனால் உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றான என்விடியா எடுத்த முடிவுகளுக்கு சீன உளவுத்துறை காரணமாக இருக்குமோ என சொல்லப்படுகிறது.

    English Summary

    Reports of Nvidia CEO Jensen Huang's relationship with Chinese businesswoman Alice Huang(என்விடியா சீன உளவுத்துறை சர்ச்சை): Nvidia latest news in tamil.