ஒரு காலத்தில்.. பலவீனமான நாடாக இருந்த இந்தியா.. இப்போ டாப் லிஸ்டில் இருக்கிறது! - பிரதமர் மோடி!

  • டெல்லி: நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார்.

    Advertisement

    மோடி தனது உரையில், ஒரு காலத்தில் பலவீனமான 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா, கடந்த 12 ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்து வரும், பலமான பொருளாதாரம் கொண்ட நாடாக மாறியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    அவர் பேசியதாவது, "நாடு கடந்த 12 ஆண்டுகளில் பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது. நாட்டின் பொருளாதாரப் பயணம் வியக்கத்தக்க வகையில் இருக்கிறது. ஒரு காலத்தில் உலகின் பலவீனமான 5 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து. இன்று உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உருவெடுத்திருக்கிறது. 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதே நமது இலக்கு.

    140 கோடி இந்தியர்களின் உழைப்பால் நாடு பல்வேறு துறைகளில் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளுக்கு வணக்கம் செலுத்துகிறேன். அணுசக்தி உலைகள் மற்றும் முக்கியமான தாதுக்கள் துறையில் இந்தியா விரைவில் பெரிய முன்னேற்றத்தை காணும். 2047க்குள் நாட்டை வல்லரசாக மாற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    இந்த ஆண்டு சுதந்திர தினம், 'வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இளைஞர் சக்தி' என்கிற கருப்பொருளை மையமாக கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் சிறப்பம்சமாக.. செங்கோட்டை கொத்தளத்தில் முதல்முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. பிரதமர் மோடி 13வது முறையாக செங்கோட்டையில் கொடியேற்றினார்.

    English Summary

    Independence Day is being celebrated with great enthusiasm across the country today. Prime Minister Narendra Modi hoisted the national flag at the Red Fort in Delhi today and addressed the nation.