ராகுல் காந்திக்கு வந்ததே கோபம்.. E20 இல்லை.. சரியான 420 பெட்ரோல்! மோடி அரசு மீது பாய்ச்சல்

  • டெல்லி: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் அனுமதிக்கப்பட்ட 20 சதவீதத்துக்கும் அதிகமாக எத்தனால் கலக்கப்படுவதாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். E20 பெட்ரோல் என்ற பெயரில் 420 வேலையை செய்து வருவதாகவும் இதனால் இந்தியர்கள் வாகனங்கள் பாழாவதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

    Advertisement

    கர்நாடகாவின் 7 மாவட்டங்களில் சேகரிக்கப்பட்ட பெட்ரோல் மாதிரிகளை ஆய்வகத்தில் பரிசோதித்ததில், 14 மாதிரிகளில் 11 மாதிரிகளில் எத்தனால் அளவு 20 சதவீதத்தை தாண்டியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சில மாதிரிகளில் 31 சதவீதத்துக்கும் அதிகமாக எத்தனால் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

    Advertisement

    ராகுல் காந்தி

    இது பெரிய விவகாரமாக இப்போது மாறியுள்ள நிலையில், தேசியளவில் ராகுல் காந்தியும் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் அனுமதிக்கப்பட்ட 20 சதவீதத்துக்கும் அதிகமாக எத்தனால் கலக்கப்படுவதாக சாடிய அவர், மக்களின் வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடப்படுவதாக விமர்சித்தார்.

    420 எரிபொருள்

    இது தொடர்பாக அவர் மேலும், "E20 என்பது 420 (மோசடி) ஆக மாறியுள்ளது. பொதுமக்களின் வாகனங்களிலிருந்து பெட்ரோல் திருடப்படுகிறது! பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படுவதாக மோடி அரசு கூறுகிறது. கர்நாடக அரசு, 7 மாவட்டங்களிலிருந்து பெட்ரோல் மாதிரிகளை சேகரித்து, அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தியது.

    Advertisement

    அதில் பரிசோதிக்கப்பட்ட 14 மாதிரிகளில் 11 மாதிரிகளில் 20%க்கும் அதிகமான எத்தனால் இருந்தது. IOCLல் 31.2% மற்றும் HPCLல் 30.5% எத்தனால் கண்டறியப்பட்டது. IOCL, HPCL, BPCL, நயாரா, ஷெல் என அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் என அனைத்துமே நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறியுள்ளன. மேலும், இந்த நிறுவனங்களின் சொந்த ஆய்வகங்கள், பெட்ரோலில் எவ்வளவு எத்தனால் உள்ளது என்ற விவரத்தையே தெரிவிக்கவில்லை.

    நஷ்டம்

    சுருக்கமாக சொன்னால், நீங்கள் அதிக விலை கொடுத்து பெட்ரோலை வாங்குகிறீர்கள், ஆனால் உங்கள் வாகனத்தின் எரிபொருள் தொட்டியில் எத்தனால் நிரப்பப்படுகிறது. இதனால் நஷ்டமடைவது யார்? நீங்கள்தான்! உங்கள் வாகனம் இவ்வளவு அதிக அளவிலான எத்தனாலை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. இதன் காரணமாக மைலேஜ் குறைகிறது; அடிக்கடி மெக்கானிக்கிடம் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆசையாக நீங்கள் வாங்கிய வாகனம் பாழாகிறது.

    Advertisement

    பெட்ரோல் நிலையங்களில், உங்கள் வாகனத்தில் என்ன நிரப்பப்படுகிறது என்பது குறித்த வெளிப்படையாக எதையும் சொல்ல மறுக்கிறார்கள்.. உங்கள் வாகனத்திற்கு என்ன வேண்டும் என்பதை உங்களால் தீர்மானிக்க முடிவதில்லை. மிஸ்டர் மோடியே, பதில் சொல்லுங்கள்.. நமது நாட்டில் உள்ள வாகனங்களில் உண்மையில் என்ன நிரப்பப்படுகிறது? பெட்ரோலில் எவ்வளவு எத்தனால் கலக்கப்பட்டுள்ளது? 20%க்கும் அதிகமாக எத்தனால் கலக்கும் நிறுவனங்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?உங்கள் கொள்கைகளால் உண்மையில் பயனடைவது யார்?" என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

    பெட்ரோலிய நிறுவனங்கள்

    முன்னதாக கர்நாடக அரசின் குற்றச்சாட்டை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மறுத்துள்ளன. நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் E20 பெட்ரோல், இந்திய தர நிர்ணய அமைப்பின் IS 17021 விதிமுறைகளுக்கு இணங்க இருப்பதாக அவை கூறியுள்ளன. மேலும், அக்டோபரில் நடத்தப்பட்ட மாதிரி சேகரிப்பின்போது தங்கள் நிறுவன பிரதிநிதிகள் உடனிருக்கவில்லை என்றும், ஆய்வுக்காக எடுக்கப்பட்ட மாதிரிகள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளன.

    English Summary

    Rahul Gandhi has alleged that petrol samples tested in Karnataka contained more than the permitted 20% ethanol(E20 பெட்ரோல் குறித்து ராகுல் காந்தி): Rahul Gandhi on E20 Petrol latest news in tamil.