SIRக்கு எதிராக டெல்லியில் மீண்டும் வெடித்த போராட்டம்.. தேர்தல் ஆணையத்தை நோக்கி மெகா பேரணி!

  • டெல்லி: வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டோரை டெல்லி போலீசார் கைது செய்தனர். டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்தை நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    Advertisement

    கடந்த சில வாரங்களாகவே தேர்தல் ஆணையத்தை சுற்றியே சர்ச்சை நீடித்து வருகிறது. எஸ்ஐஆர் உள்ளிட்ட விவகாரங்களில் தலைமை தேர்தல் ஆணையர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டார் என்பதே பிரதான குற்றச்சாட்டாகும். இதை கண்டித்து நாடு முழுக்க பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தின.

    Advertisement

    போராட்டம்

    குறிப்பாக டெல்லியில் ஒரு பக்கம் அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. இன்னொரு பக்கம் கரப்பான் பூச்சி கட்சி உள்ளிட்ட மக்கள் இயக்கங்கும் கூட போராட்டங்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக கடந்த வாரம் கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த போது, டெல்லி முழுக்க பாதுகாப்பு போடப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும், அந்த இயக்கத்தின் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே இன்றைய தினம் டெல்லியில் மீண்டும் போராட்டம் நடந்துள்ளது., டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்தை நோக்கி பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    Advertisement
    கர்நாடகாவில் புயலை கிளப்பும் பிரகாஷ் ராஜ்! SIRக்கு எதிராக நேரடியாக களமிறங்கி பிரச்சாரம்!

    பேரணி

    SIRக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் டெல்லி ஒருங்கிணைப்பு குழு இந்த பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது. கோல் டாக் கானா பகுதியில் இடத்தில் இருந்து பேரணி தொடங்கியது. இதில் பங்கேற்றவர்கள் தேசிய கொடிகளையும், வாக்காளர் பட்டியல் திருத்த பணியை நிறுத்தக் கோரும் பதாகைகளையும் ஏந்தி சென்றனர். பேரணி தொடங்குவதற்கு முன்பாக கோல் டாக் கானா பகுதியில் சுமார் 150 பேர் திரண்டிருந்தனர். பின்னர் அவர்கள் தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்தை நோக்கி சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    Advertisement

    வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையில் முறைகேடுகள் நடைபெறுவதாக கூறி, அதற்கு எதிராகப் பல்வேறு அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. People Against SIR அமைப்புடன் இணைந்து சம்யுக்த கிசான் மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகளும் இந்த போராட்டங்கலை ஒருங்கிணைத்து வருகின்றன.

    SIRக்கு பின் தேர்தல் நேர்மையாகத்தான் நடந்ததா? அம்பலமான முறைகேடுகள்! கேட்கவே பகீர்ன்னு இருக்கே

    திட்டம்

    டெல்லியில் அகில இந்திய மாணவர் சங்கம், இந்திய மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் பிற்பகல் 1 மணிக்கு பேரணி நடத்த திட்டமிட்டிருந்தன. குருத்வாரா பங்களா சாகிப், கோல் டாக் கானா மற்றும் கோல் மார்க்கெட் ஆகிய இடங்களில் இருந்து புறப்பட்டு, தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கிச் செல்வது அவர்களின் திட்டமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    இன்றைய தினம் போராட்டத்தை ஒருங்கிணைத்த People Against SIR என்பது மாணவர்கள், விவசாயிகள் மற்றும் சிவில் உரிமைச் செயல்பாட்டாளர்களை உள்ளடக்கிய அமைப்பாகும். போராட்டத்தையொட்டி மத்திய டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. டெல்லி போலீசார் மற்றும் விரைவு அதிரடிப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.

    English Summary

    Delhi Police arrested over 100 people during a march against the Special Intensive Revision(டெல்லியில் பெரியளவில் வெடிக்கும் போராட்டம்): Delhi Protest latest news in tamil.