ஒரு தட்டு பிரியாணியாக்கு மக்களை விலைக்கு வாங்கிவிடலாம்! ஆனா.. இந்தியா கெத்து! பாக். இளைஞர் பாராட்டு

  • டெல்லி: நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஜென் Z இளைஞர்கள் நடத்திய போராட்டம் உலகம் முழுவதும் கவனம் பெற்றிருந்தது. இப்படி இருக்கையில், பாகிஸ்தானில் ஒரு தட்டு பிரியாணி இருந்தால் மக்களை விலைக்கு வாங்கிவிடலாம். ஆனால், இந்தியா அப்படி கிடையாது.. இந்திய இளைஞர்கள் கெத்து என்று பாகிஸ்தான் இளைஞர்கள் பாராட்டு தெரிவித்திருக்கின்றனர்.

    Advertisement

    பாகிஸ்தானை சேர்ந்த பிரபல கன்டென்ட் கிரியேட்டரான பிலால் ஹசன், "இந்தியாவில் தங்கள் உரிமைகளுக்காக அரசை எதிர்த்து இளைஞர்கள் கேள்வி கேட்கிறார்கள். ஆனால், எங்கள் நாட்டில் ஒரு தட்டு பிரியாணி கொடுத்து மக்களை விலைக்கு வாங்கிவிடலாம். மீறி கேள்வி கேட்டால் அவர்களை காணாமல் ஆக்கிவிடுவார்கள்" என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    அதேபோல கரப்பான் ஜனதா கட்சியின்(சிஜேபி) போராட்டத்திற்கு பாகிஸ்தான் நிதியுதவி செய்ததாக வலதுசாரிகள் விமர்சித்திருந்ததை குறிப்பிட்டு பேசிய பிலால், "எங்க சொந்த நாட்டை நடத்தவே எங்ககிட்ட பணம் இல்லை. இதுல.. இந்திய மாணவர்களுக்கு நாங்க எப்படிங்க நிதி கொடுக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். இவரது இந்த சோஷியல் மீடியா போஸ்ட் பரவலாக வரவேற்பை பெற்றிருக்கிறது.

    மேலும், "இந்தியாவை பொறுத்தவரை அதன் மிகப்பெரிய பலமே ஒற்றுமைதான். சாதி, மதத்தை கடந்து அவர்கள் ஒன்றுபட்டனர். ஆனால், பாகிஸ்தானில் பஞ்சாபி, பஷ்தூன், சன்னி, ஷியா இப்படி பிரிந்து இருப்பதால், ஒன்றுப்பட முடியவில்லை" என்றும் அந்நாட்டு இளைஞர்கள் கூறியிருக்கின்றனர்.

    Advertisement

    அதேபோல சிஜேபி போராட்டம் குறித்து இலங்கை இளைஞர்களும் பாராட்டு தெரிவித்திருக்கின்றனர். "ஒரு போராட்டக்காரராக இந்திய இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் இலக்கை அடையும் வரை பின்வாங்காதீர்கள்" என இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருந்த இளைஞர்கள் கூறியிருக்கின்றனர்.

    நேபாளத்தின் காத்மாண்டுவை சேர்ந்த சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், இந்திய இளைஞர்களின் கோபமும் கொந்தளிப்பும் நியாமானது என்றும், அதை சாதாரண விஷயமாக கடந்து போக முடியாது என்றும் கூறி வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.

    இப்படியாக அண்டை நாடுகள் முழுவதும் இந்தியாவின் ஜென் Z இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

    English Summary

    Pak Nepal Media Hail: The protests led by Gen Z youth against irregularities in the NEET exam garnered global attention. Young people in Pakistan have praised Indian youth, noting that while people in Pakistan can be bought over with just a plate of biryani, India is different—and Indian youth have real mettle.