டெல்லி: நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை நள்ளிரவு வெளியிட்ட வீடியோ செய்தியில் உறுதியளித்துள்ளார்.
தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் மாணவர்களிடம் வீடியோ வழியாக உரையாற்றிய பிரதமர், இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்தார். இதுகுறித்த புதிய மசோதா விவாதிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
சமூக வலைத்தளம் வாயிலாக மாணவர்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "வினாத்தாள் கசிவு என்பது ஒரு சாதாரண விஷயமல்ல. இது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது" என்று கவலையுடன் குறிப்பிட்டார். கடந்த இரண்டரை மாதங்களில் அரசாங்கம் எடுத்துள்ள தீவிர நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர்.. வினாத்தாள் கசிவில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் ஒரு கல்வி ஆண்டு வீணாகிவிடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருந்தது. அதனால்தான் 22 லட்சம் தேர்வர்களுக்கு மிகக் குறைந்த காலத்தில் மறுதேர்வு நடத்தப்பட்டு, ஜூலை 19 அன்று முடிவுகளும் வெளியிடப்பட்டன. அரசு இத்துடன் நின்றுவிடாது. வெள்ளிக்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளுக்கான வரைவுச் சட்டம் விவாதிக்கப்படும். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது வாரத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் உறுதியளித்தார். மேலும் மாணவர்களின் நலனைப் பாதுகாக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் பிரதமர் மோடி தனது பதிவில் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, பொதுத் தேர்வுகளில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பான குற்ற வழக்குகளை உடனடியாக விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் கீழ், நீதிபதி அனு குரோவர் பாலிகாவை சிறப்பு விரைவு நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியாக டெல்லி உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது. இந்த நீதிமன்றம் வினாத்தாள் கசிவு தொடர்பான குற்றங்களை விரைந்து விசாரித்து உரிய தண்டனையை வழங்கும். வினாத்தாள் கசிவு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய அரசு மற்றொரு முக்கிய நிர்வாக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. உயர் கல்வித் துறைச் செயலாளராக இருந்த வினீத் ஜோஷி அந்தப் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார். ஐ.ஏ.எஸ் அதிகாரியான நரேஷ் பால் அவருக்குப் பதிலாக, ராஜஸ்தான் கேடரைச் சேர்ந்த 1994-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான நரேஷ் பால் கங்வார் புதிய உயர் கல்வித் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் செயலாளராகப் பணியாற்றி வந்தார். மேலும் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்திலும் இணைச் செயலாளராகச் செயல்பட்ட அனுபவம் கொண்டவர்.மாணவர்களின் எதிர்காலமே முதன்மையானத - பிரதமர் மோடி
அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவு
சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைப்பு
உயர் கல்வித்துறைச் செயலாளர் அதிரடி மாற்றம்