சென்னையின் 2வது விமான நிலையம்.. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்ட திமுக.. மத்திய அரசு பதில்!

  • டெல்லி: சென்னையின் 2வது விமான நிலையத்தை பரந்தூருக்கு மாற்றாக வேறு இடத்தில் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் இருந்து இதுவரை எந்தவொரு கோரிக்கையும் வரவில்லை என்று மத்திய இணையமைச்சர் முரளிதர மோஹோல் தெரிவித்துள்ளார். திமுக எம்பி வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு இந்த பதிலை அளித்திருக்கிறது.

    Advertisement

    சென்னையின் 2வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வந்தது. மொத்தமாக பரந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. திமுக ஆட்சியில் இந்த பணிகள் தீவிரமாக நடந்து வந்தன.

    Advertisement

    இந்த 5,746 ஏக்கர் நிலத்தில் சுமார் 3,774 ஏக்கர் நிலம் தனியார் வசம் உள்ளது. இதனால் வருவாய்த் துறை தரப்பில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த ஆண்டே தொடங்கிவிட்டது. மார்ச் மாதம் வரை நிலம் கையகப்படுத்தப்பட்டதாக வருவாய்த் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தீவிரமாக எதிர்த்து வருகின்றனர்.

    இதையடுத்து தவெக ஆட்சி அமைந்த நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டம் அமலுக்கு வருமா என்ற சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக முதல்வர் விஜய் 2 முறை ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போதே பரந்தூர் விமான நிலைய திட்டம் அமலுக்கு வருமா என்ற சந்தேகம் எழுந்தது. அதற்கேற்ப தவெக நிலைப்பாடும் எதிராகவே இருந்தது.

    Advertisement

    இதுதொடர்பாக சிடிஆர் நிர்மல்குமார் பேசுகையில், பரந்தூர் விமான நிலையம் அமைக்க தவெக அரசு அனுமதி அளிக்காது. அந்த பகுதியில் 800 முதல் 900 ஏக்கர் வரை நீர்நிலைகள் இருப்பதால் ஓடுதளம் அமைப்பது சாத்தியமற்றது. இதுதொடர்பாக வேறு இடத்தை தேர்வு செய்வது குறித்து அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசிப்பதாக கூறி இருந்தார்.

    இப்படியான சூழலில் திமுக எம்பி வில்சன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. அதில் சென்னையின் 2வது விமான நிலையத்தை பரந்தூருக்கு மாற்றாக வேறு இடத்தில் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் இருந்து இதுவரை எந்தவொரு கோரிக்கையும் வரவில்லை என்று மத்திய இணையமைச்சர் முரளிதர மோஹோல் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Parandur Airport: No Request Received From TN Govt to Shift Parandur Airport Project clarifies Union Government