நேராக ரூமிற்கு போன மூத்த அமைச்சர்.. முடியவே முடியாது.. திட்டவட்டமாக மறுத்த ராகுல் காந்தி! பின்னணி

  • டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மூன்றாவது வாரமாக தொடர்ந்து முடங்கி வருகிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அரசு தரப்பில் சில கோரிக்கைகளை ரிஜிஜு வைத்த போதிலும், அதை ஏற்க ராகுல் காந்தி மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    இன்றும் கூட அதே நிலை தான் தொடர்ந்தது. மக்களவை இன்று புதன்கிழமை காலை கூடிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சியினரின் தொடர் முழக்கங்களால் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது தான் இந்த முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேச்சுவார்த்தை நடத்தினார். நேரடியாக ராகுல் காந்தி ரூமிற்கு சென்ற கிரண் ரிஜிஜு, அங்கு ராகுலை சந்தித்து பேசினார்.

    Advertisement

    மழைக்கால கூட்டத்தொடர்

    இந்த மழைக்கால கூட்டத்தொடரிலேயே தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால், அதற்குக் காங்கிரஸின் ஒத்துழைப்பு தர வேண்டும் என கிரண் ரிஜிஜு கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இருப்பினும், இதை திட்டவட்டமாக மறுத்த ராகுல் காந்தி, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு குறித்த விவாதம் வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், கடந்த ஜூலை 20ஆம் தேதி மாணவர்கள் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதும் எதிர்க்கட்சியினரின் முக்கிய கோரிக்கையாக இருப்பதாகவும் இந்த இரண்டையும் நிறைவேற்றும் வரை அவை அலுவல் பணிகளை நடத்த அனுமதிக்க முடியாது என ராகுல் காந்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    Advertisement

    ராகுல் திட்டவட்டம்

    கிரண் ரிஜிஜு எவ்வளவோ சொல்லியும் ராகுல் காந்தி தனது முடிவில் உறுதியாக இருந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து கிரண் ரிஜிஜு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து, நாடாளுமன்றம் முடங்கி வருவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இது ஒரு பக்கம் இருக்க.. இந்த மழைக்கால கூட்டத்தொடரிலேயே தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனாவில் இருந்து சில எம்பிக்கள் விலகி ஆதரவு அளித்ததால், கடந்த கூட்டத்தொடரில் நிறைவேறாத இந்த மசோதாவை இம்முறை நிறைவேற்ற முடியும் என அரசு நம்பிக்கையுடன் இருக்கிறதாம்.

    Advertisement

    போலீஸ் நடவடிக்கை

    மாணவர்கள் மீதான போலீஸ் நடவடிக்கை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், போராட்டங்களில் போலீசாரை எப்படி பயன்படுத்துவது குறித்து முடிவு எடுப்பது மாஜிஸ்திரேட் முடிவு என்றும் அதற்கு உள்துறை அமைச்சர் பொறுப்பல்ல என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

    ராமர் கோயில் விவகாரம்

    அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்காக கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற வளாகத்திலேயே எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்திய அரசு சார்பில் இதுவரை எந்தவொரு பதிலும் இல்லை.

    Advertisement

    கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடர் இப்போது வரை எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக முழுமையாக முடங்கியுள்ளது. கேள்வி நேரம் கூட முழுமையாக நடைபெறவில்லை. இருப்பினும், அமளிக்கு மத்தியிலும் மத்திய அரசு இதுவரை 5 மசோதாக்களை விவாதமின்றி நிறைவேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Parliamentary Affairs Minister Kiren Rijiju met Rahul Gandhi to break the ongoing Parliament deadlock(மொத்தமாக முடங்கிய நாடாளுமன்றம்): Parliament Deadlock latest news in tamil.