இழுத்து மூடப்பட்ட நாடாளுமன்ற கதவுகள்.. துப்பாக்கியுடன் நிற்கும் துணை ராணுவம்! டெல்லியில் பரபரப்பு

  • டெல்லி: இன்று நாடாளுமன்றத்தை நோக்கி கரப்பான் பூச்சி கட்சியினர் பேரணி செல்ல முயன்றனர். அவர்களை ஜந்தர் மந்தரில் இருந்து போலீசார் வெளியே விடவில்லை. இருப்பினும், ஒரு சிலர் மட்டும் நாடாளுமன்றத்தை நோக்கி சென்றுள்ளனர். அவர்கள் நாடாளுமன்றத்தில் நுழைய முயன்றபோது அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. நாடாளுமன்ற வளாகம் மூடப்பட்டுள்ள நிலையில், உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.

    Advertisement

    கல்வித்துறையில் சீர்திருத்தங்களை வலியுறுத்தியும், நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியை நடத்த கரப்பான் பூச்சி கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

    Advertisement

    இந்த பேரணியை முன்னிட்டு டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜந்தர் மந்தர், நாடாளுமன்ற வளாகம், விஜய் சௌக், இந்தியா கேட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், வாகன சோதனை, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும், பெருந்திரளான மக்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆதரவாக தொடர்ந்து குவிந்தனர். மெட்ரோ நிலையங்களை முடக்கிய போதிலும் மக்கள் அதிகளவில் திரண்டனர். அண்டை மாநிலங்களில் இருந்தும் மக்கள் திரண்டனர். இதனால் நிலைமை மோசமானது. இருப்பினும், போலீசார் அவர்களை நாடாளுமன்றத்தை நோக்கி முற்றுகையிட அனுமதிக்கவில்லை.

    Advertisement

    இருப்பினும், அங்கிருந்தவர்களில் ஒரு பகுதியினர் மட்டும் எப்படியோ நாடாளுமன்றத்தை நோக்கி கிளம்பிவிட்டனர். அவர்கள் நாடளுமன்ற வளாகத்தில் நுழைய முயன்ற போது, அங்கிருந்த பாதுகாப்பு படையினர் அவர்களை விரட்டி அடித்தனர். அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. நாடாளுமன்ற வளாகம் மூடப்பட்டுள்ள நிலையில், உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.

    நாடாளுமன்றத்தில் இப்போது மழைக்கால கூட்டத்தொடர் நடக்கும் சூழலில், உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வளாகத்தில் நுழைய முயன்றோரை நோக்கி துணை ராணுவ படையினர் துப்பாக்கியுடன் முன்னேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    English Summary

    Tension gripped New Delhi after security forces stopped Cockroach Janta Party supporters(கரப்பான் பூச்சி கட்சியினர் டெல்லியில் முற்றுகை போராட்டம்): CJP March In Delhi latest news in tamil.