ஜுலை 20 டூ ஆகஸ்ட் 13.. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு.. மத்திய அரசு பெரிய பிளான்

  • டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான தேதியை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு இன்று அறிவித்துள்ளார். அதன்படி ஜுலை 20ம் தேதி முதல் முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    Advertisement

    இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: '' நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்காக இருசபைகளையும் கூட்டுவதற்கான அரசின் பரிந்துரைக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். அதன்படி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜுலை 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் தேசத்துக்கு முக்கியமான பிரச்சனைகள் பற்றி அர்த்தமுள்ள விவாதங்கள், ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் 130வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா , மே வழங்குவது உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா மற்றும் தற்போதைய வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் (எப்சிஆர்ஏ) திருத்த மசோதா உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    இதில் கடந்த கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா ஆகியவை ஒன்றாக கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதாக்களை நிறைவேற்ற 50 சதவீத எம்பிக்களின் ஆதரவு தேவை. அது கிடைக்காததால் அந்த மசோதாக்கள் தோல்வியடைந்தன.

    Advertisement

    தற்போது ஆம்ஆத்மி கட்சியின் எம்பிக்கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் 20க்கும் அதிகமானவர்களும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) அணியை சேர்ந்த 6க்கும் அதிகமான எம்பிக்களும் பாஜகவிற்கு ஆதரவளித்துள்ளனர். மேலும் சில கட்சிகளின் ஆதரவை பெற பாஜக திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த மசோதாக்களை மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    English Summary

    Parliament Moonsoon Session: Parliament Moonsoon session 2026 to be starts on July 20 to August 13.