டெல்லி: நாடாளுமன்றத்தின் நடப்பு ஆண்டிற்கான குளிர்காலக் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் பல்வேறு முக்கியமான மசோதாக்களை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்பதில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தீவிர முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் இந்த மசோதாக்கள் எவ்வித தடையுமின்றி நிறைவேறுவதற்கு திமுகவின் ஆதரவு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, திமுக தலைமையுடன் சமரசம் பேசி ஆதரவைப் பெற பாஜக தேசிய தலைமை தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் மசோதாக்களில் மிக முக்கியமானது 130-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவாகும். தீவிர குற்ற வழக்குகளில் சிக்கித் தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருக்கும் பிரதமர், மாநில முதலமைச்சர்கள் அல்லது அமைச்சர்களைத் தானாகவே பதவி நீக்கம் செய்யும் கடுமையான விதியை இந்தச் சட்டம் முன்மொழிகிறது. கடந்த கூட்டத்தொடரின் போது இந்த மசோதாவை விரிவாக ஆய்வு செய்ய 31 எம்பிக்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC) அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகே மசோதா மீது விவாதம் நடத்த முடியும். எனவே, குழு தனது ஆய்வு அறிக்கையை விரைந்து தாக்கல் செய்ய வேண்டும் என அரசு தரப்பில் அழுத்தம் தரப்பட்டு வருகிறது. கூட்டுக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், இந்த குளிர்கால கூட்டத்தொடரிலேயே மசோதாவைச் சட்டமாக்கப் பிரதமர் மோடி உறுதியோடு இருப்பதாகத் தெரிகிறது. அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யும் மசோதா மட்டுமல்லாமல், இன்னும் சில முக்கிய சட்ட வரைவுகளையும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விளையாட்டு வீரர்களின் ஒழுக்கத்தை உறுதி செய்யும் ஊக்க மருந்து தடுப்புச் சட்டத் திருத்தங்கள். இவை அனைத்தையும் எந்தவொரு இழுபறியும் இல்லாமல் நிறைவேற்றுவதற்கு மாநிலங்களவை மற்றும் மக்களவையில் கணிசமான பலத்தைக் கொண்டிருக்கும் கட்சிகளின் உதவி மத்திய அரசுக்கு அவசியமாகிறது. இந்த மசோதாக்களை நிறைவேற்றுவதில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை சமாளிக்க, திமுகவின் வாக்குகளும் ஒத்துழைப்பும் மிக அவசியமாக இருக்கிறது. இதற்காக, திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களான கனிமொழி மற்றும் டி.ஆர். பாலு ஆகியோர் வழியாக திமுக தலைமைக் கழகத்திற்கு பாஜக முக்கியத் தகவல்களை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவித்தால் இரு தரப்புக்கும் இடையேயான அரசியல் உறவில் புதிய இணக்கம் ஏற்படும் என்ற சிக்னல்களும் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தமிழக அரசியலிலும் திமுக உட்கட்சியிலும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பாஜகவுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து, மத்தியில் மீண்டும் அமைச்சரவையில் இடம்பிடிக்கலாம் என திமுகவின் சில மூத்த தலைவர்களும் எம்பிக்களும் விரும்புவதாகக் கூறப்படுகிறது. கடந்த காலங்களில் மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்தது போல, இப்போதும் பாஜக முன்வைக்கும் திட்டங்களுக்கு ஆதரவளித்து மத்திய அமைச்சரவையில் இணையலாம் என்று சிலர் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வலியுறுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருப்பினும், கொள்கை ரீதியாகவும் மாநில அளவிலும் பாஜகவை மிகக் கடுமையாக எதிர்த்து வரும் திமுக தலைமை, இந்த மசோதாக்கள் விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கும்போது டெல்லி மற்றும் தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. - சிறப்பு நிருபர் எழில்30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி பறிப்பு: 130-வது சட்டத்திருத்தம்
கல்வி, ஊக்க மருந்து மற்றும் நிதி மசோதாக்கள்
வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதா. யுஜிசி (UGC) மற்றும் ஏஐசிடிஇ (AICTE) ஆகிய அமைப்புகளுக்கு மாற்றாக உயர்கல்விக்கு ஒரே ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்கும் புதிய கல்வி மசோதா.திமுகவிடம் பாஜக தூது?
திமுகவில் மத்திய அமைச்சர் பதவி ஆசை?