டிராபிக் ஃபைன் கட்டலனா.. மின் இணைப்பு துண்டிக்கப்படும்! வருகிறது புதிய விதிமுறை?

  • டெல்லி: ஹெல்மெட், சீட் பெல்ட் போடாமல் வாகனங்களை ஒட்டுவது, போக்குவரத்து விதிகளை மீறுவது உள்ளிட்டவற்றிற்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், சிலர் இந்த அபராதத்தை கட்டாமல் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இந்நிலையில் இனி டிராபிக் அபராதங்களை EB பில்லுடன் இணைக்கலாம் என்றும், அபராதம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பை இதன் மூலம் துண்டிக்க முடியும் என்றும் உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்திருக்கிறது.

    Advertisement

    நீதிபதி ஜே.பி.பார்திவாலா தலைமையிலான அமர்வு, நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராதங்களை வசூலிப்பது குறித்த வழக்கு விசாரணையின்போது இந்த அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது.

    Advertisement

    "மக்கள் போக்குவரத்து அபராதங்களை செலுத்தவில்லை எனில், அதை அவர்களின் வீட்டு மின் கட்டணத்துடன் சேர்த்துவிடுங்கள். மின்கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்பதால் அவர்கள் பயந்து அபராதத்தை செலுத்துவார்கள்" என்று நீதிமன்றம் யோசனை தெரிவித்திருக்கிறது.

    இந்தியா போன்ற ஒரு நாட்டில்.. இத்தகைய நடைமுறை சிக்கல்களுக்கு இப்படிப்பட்ட மாற்று வழிகளை கண்டுபிடிப்பது அவசியம் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. வெறும் மின் கட்டணம் மட்டுமின்றி, அபராதம் செலுத்தாத வாகன ஓட்டிகளுக்கு எதிராக பின்வரும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

    அதாவது, அபராதம் நிலுவையில் இருக்கிறது எனில், அந்த வாகனங்களுக்கு RC புதுப்பித்தல், நகல் RC வழங்குதல் மற்றும் வாகன உரிமையாளர் பெயர் மாற்றம் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும். மட்டுமல்லாது வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் ஆகியவற்றை அபராதம் முடியும் வரை வழங்கக்கூடாது.

    Advertisement

    டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பதை தடுப்பதோடு, ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள உரிமங்களை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும். Parivahan வெப்சைட்டில் குறிப்பிட்ட வாகனங்களை பிளாக் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டும். ரோட்டில் போலீசார் திடீரென தணிக்கை மேற்கொள்ளும்போது, ஏதேனும் ஒரு வாகனத்திற்கு இ-செலான் அபராதம் நிலுவையில் இருப்பது தெரிய வந்தால், அந்த வாகனத்தை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

    இப்படி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்துவதற்கு காரணம் இருக்கிறது. நாடு முழுவதும் சுமார் ரூ.45,000 கோடி இ-செலான் அபராத தொகை தற்போது நிலுவையில் இருக்கிது. இதில் இதுவரை ரூ.25,000 கோடி மட்டுமே வசூலாகியிருக்கிறது. வெறும் இ-செலான்களை போலீசார் லட்சக்கணக்கில் அள்ளி வீசுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று கூறும் நீதிமன்றம், அந்த அபராத தொகை அரசிடம் வந்து சேருகிறதா? என்பதை உறுதி செய்வது முக்கியம் என்றும் தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Pay Traffic Challans: Fines are imposed for violations such as driving without a helmet or seatbelt and flouting traffic rules; however, some individuals continue to drive without paying these penalties. Against this backdrop, the Supreme Court has proposed linking traffic fines to electricity bills, suggesting that the electricity connections of defaulters could be disconnected as a result.