80வது சுதந்திர தினம்.. டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி!

  • டெல்லி: நாடு முழுவதும் இன்று 80வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.

    Advertisement

    மோடியின் இந்த ஆண்டு உரையில், அரசின் சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் இடம்பெற்றிருக்கிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

    Advertisement

    இந்த ஆண்டு 'வந்தே மாதரம் தேசிய பாடலில் 150வது ஆண்டு கொண்டாட்டம்' மற்றும் '2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இளைஞர் சக்தி' என்கிற கருப்பொருளில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் முறையாக இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டிருக்கிறது.

    காலை பிரதமர் மோடி செங்கோட்டைக்கு வந்ததும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் சஞ்சய் சேத், பாதுகாப்புத்துறை செயலர் ராஜேஷ் குமார் சிங், முப்படைகளின் தலைமை தளபதி என்.எஸ்.ராஜா சுப்பிரமணி, ராணுவம், கடற்படை, விமானப்படை தலைமை தளபதிகள் ஆகியோர் பிரதமரை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

    Advertisement

    இதனை தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் இருந்தபடி முப்படையினர், டெல்லி காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக்கொண்டனர். பின்னர் பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அப்போது 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவப்பட்டது. இதையடுத்து மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    சுதந்திர தின கொண்டாட்டம் காரணமாக செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. செங்கோட்டையின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் 1000க்கும் அதிகமான ஏஐ கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

    English Summary

    The country is set to celebrate its 80th Independence Day in a grand manner today. Prime Minister Narendra Modi will participate in the magnificent ceremony at the Red Fort in Delhi and hoist the national flag from its ramparts. For the first time, the 'Vande Mataram' song will be played during this event.