மோடியின் திடீர் அழைப்பு.. 4.5 மணிநேரம் நடந்த அமைச்சர்கள் கூட்டம்.. நேற்று இரவு நடந்தது என்ன?

  • உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாயின் தொடர் வீழ்ச்சி மற்றும் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காக்ரோச் ஜனதா பார்ட்டி விவகாரம் ஆகியவற்றுக்கு மத்தியில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்கள் கூட்டம் நேற்று இரவு சுமார் நான்கரை மணி நேரம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    நாட்டின் பொருளாதாரத்தையும் மக்கள் நிதிநிலையையும் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த நீண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டம் அரசின் செயல்திறனை அதிகரிக்கவும், அமைச்சகங்களின் பணிகள், எதிர்கால திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யவதற்காக நடத்தப்பட்டு உள்ளது.

    Advertisement

    உயர்மட்ட கூட்டம்

    உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் ஹார்முஸ் கடல்சந்தி பிரச்சனைகள் தீவிரமடைந்து வரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் சேவா தீர்த்தில் நடைபெற்ற இந்த உயர்மட்ட கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், அமைச்சக செயலாளர்கள், அமைச்சரவை செயலாளர் மற்றும் நிதி ஆயோக் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விக்சித் பாரத் 2047

    இக்கூட்டத்தில் பிரதமர் மோடி "விக்சித் பாரத் 2047" இலக்கை மிகவும் முக்கியமான வலியுறுத்தியுள்ளார். இது வெறும் பேச்சுக்காக சொல்லப்படுவது இல்ல, இந்தியாவை 2047-க்குள் முழுமையான வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றும் நீண்டகால திட்டம் என்று அவர் தெரிவித்தார்.

    Advertisement

    அனைத்து அமைச்சகங்களும் இந்த இலக்கை அடைய வேகமாக செயல்பட வேண்டும் என்றும், அரசு அலுவலகங்களில் கோப்புகள் தேவையற்ற தாமதமின்றி முடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மக்கள் சேவைகள் விரைவாகக் கிடைக்கும் வகையில் நிர்வாக நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்பதும் அவரது முக்கிய அறிவுரையாக இருந்தது.

    அமைச்சர்கள் மக்களுடன் நேரடி தொடர்பை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். கடந்த 12 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் சாதனைகளை கிராமப்புற மக்கள், நடுத்தர வர்க்கம் மற்றும் இளைஞர்களிடம் எளிதாக கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

    Advertisement

    மோடி சொன்ன முக்கிய விஷயம்

    இக்கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை மோடி பகிர்ந்து, நேற்று மத்திய அமைச்சர்கள் உடனான முக்கிய கூட்டம் நடந்தது. "Ease of Living" மற்றும் "Ease of Doing Business" ஆகிய இரு பிரிவுகளிலும் இந்தியாவை எப்படி மேலும் முன்னேற்ற வேண்டும், இதற்கான திட்டங்கள் குறித்தும், விக்சித் பாரத் 2047 இலக்கை அடையும் திட்டத்தை இக்கூட்டத்தில் முக்கியமாவும், விரிவாக விவாதிக்கப்பட்டது என தெரிவித்தார்.

    4.5 மணிநேர கூட்டம்

    இந்த 4.5 மணிநேர கூட்டத்தில் வேளாண்மை, வனத்துறை, தொழிலாளர் நலன், சாலை போக்குவரத்து, வெளிவிவகாரம், வர்த்தகம், மின்சாரம் உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்கள் தங்களது செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த அறிக்கைகளை சமர்ப்பித்தன.

    Advertisement

    செயல்திறன் குறைவாக உள்ள அமைச்சகங்களுக்கு பணிச்சூழலை மேம்படுத்தி, வேகமான முடிவுகளை எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்தக் கூட்டம் மத்திய அரசின் அடுத்த கட்ட நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார நிலைத்தன்மைக்கான அடித்தளமாக அமையும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    மோடியின் உத்தரவு

    உலகப் பொருளாதார நெருக்கடி, ஹார்முஸ் கடல்சந்தி பிரச்சனை, எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவை ஆகியவை இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்காமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அமைச்சர்களுக்கு தெளிவான உத்தரவு பிறப்பித்தார்.

    பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறும் தொடர்ந்து மோடி அறிவுறுத்தி வருகிறார்.

    English Summary

    Prime Minister Narendra Modi chaired a crucial 4.5-hour high-level meeting with central ministers in Delhi to address rising global crude oil prices, sharp rupee depreciation and the ongoing Cockroach Janta Party controversy, issuing strict directives for faster governance and economic stability. The marathon session focused on accelerating Viksit Bharat 2047 goals, easing procedures for citizens and ensuring fuel price hikes do not burden common people.