நான் ஒரு அறிவுஜீவி நக்சல்.. ப சிதம்பரம் சொன்ன வார்த்தை.. பாய்ந்து வந்த மத்திய அமைச்சர்.. பதிலடி!

  • டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவுஜீவி நக்சல் என்று குறிப்பிட்டு விமர்சித்திருந்தார். இதற்கிடையே இதை காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் "நான் பெருமைமிக்க அறிவுஜீவி நக்சல்" காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிவிட்டிருந்த நிலையில், அதற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலடி கொடுத்துள்ளார்.

    Advertisement

    ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் சுதந்திர தினம் கோலகாலமாக கொண்டாடப்பட்டது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டை தேசிய கொடியை ஏற்றினார். அப்போது செங்கோட்டையில் இருந்து உரையாற்றிய பிரதமர் மோடி பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினார்.

    Advertisement

    விவாதம்

    அப்போது பிரதமர் மோடி, நாட்டில் ஆயுதம் ஏந்திய நக்சலிசம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக கூறினார். இருப்பினும், நக்சல் சித்தாந்தத்தை ஆதரிப்பவர்கள் அமைப்புகளுக்குள் இருந்து தாக்கத்தை ஏற்படுத்த முயல்வதாக எச்சரித்திருந்தார். அவர்களை அறிவுஜீவி நக்சல் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். இதுவே பெரிய விவாதமாக வெடித்தது.

    அறிவுஜீவி நக்சல்

    பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் ப.சிதம்பரம் ட்விட்டரில் தளத்தில், "நான் ஒரு பெருமைமிக்க அறிவுஜீவி நக்சல்!" என பதிவிட்டிருந்தார். பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவுஜீவி நக்சல் என்று பொருள்படும் 'திமாகி நக்சல்' என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்த நிலையில், அதை வைத்தே சிதம்பரம் பதிலடி கொடுத்திருந்தார்.

    Advertisement

    மத்திய அமைச்சர் பதிலடி

    இதற்கிடையே சிதம்பரத்தின் பதிவுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "மரியாதைக்குரிய முன்னாள் உள்துறை அமைச்சரின் கருத்து மிகவும் வருத்தமளிக்கும் மற்றும் தீங்கு விளைவிக்கும் கருத்து. மேலும், பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் 'திமாகி நக்சல்கள்' என்று கூறவில்லை.

    மோடி குறிப்பிட்ட அறிவுஜீவி நக்சல்கள் 3 வகையினர். முதலில் மாவோயிஸ்டுகளை ஆதரித்து, இந்திய அரசியலமைப்பை நிராகரிப்பவர்கள்.. அடுத்து பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்து, 370வது சட்டப்பிரிவை ஆதரிப்பவர்கள்.. அடுத்து இந்தியாவில் இருந்து வடகிழக்கு மாநிலங்களைப் பிரிக்க 'சிக்கன் நெக்' பகுதியை துண்டிக்க வேண்டும் என விரும்புபவர்கள். இவர்களை தான் பிரதமர் மோடி அறிவுஜீவி நக்சல்கள் என குறிப்பிட்டார்" என்று கிரண் ரிஜிஜூ பதிலடி கொடுத்திருக்கிறார்.

    Advertisement

    பிரதமர் மோடி என்ன பேசினார்

    80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் இருந்து உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் ஆயுதம் ஏந்திய நக்சலிசத்தை எதிர்த்து பாதுகாப்புப் படைகள் வெற்றி பெற்றுள்ளதாக கூறினார். அவர் மேலும், "அதே நேரம் மாவோயிஸ்ட் மனநிலை கொண்டவர்கள் நாட்டின் அமைப்புகளுக்குள் வேரூன்றி இருக்கிறார்கள். கொள்கை முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இவர்கள் தொடர்ந்து செயல்படுகிறார்கள்.

    பல ஆண்டுகளாக மாவோயிஸ்ட் மனநிலை கொண்டவர்கள் அதிகாரத்தின் முக்கிய இடங்களில் இருந்தனர். அவர்கள் அரசு குழுக்களில் ஆலோசகர்களாக செயல்பட்டு, அரசு கொள்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினர். மேலும், நாட்டில் இதுபோன்ற அறிவுஜீவி நக்சல்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும். பல ஆண்டுகளாக நீடித்த நக்சலிசம் மற்றும் மாவோயிஸ்ட் வன்முறை காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டது.

    Advertisement

    நக்சல் இயக்கம்

    இந்த மோதல்களில் 3,500க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். இது பல்வேறு போர்களில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கையைவிட அதிகம். 2014ஆம் ஆண்டு எனது தலைமையிலான அரசு அமைந்தவுடனே நக்சலிசத்தை ஒழிக்க முன்னுரிமை கொடுத்தோம். அதை வெற்றிகரமாக செய்தும் காட்டியுள்ளோம்" என்றார்.

    English Summary

    PM Narendra Modi Independence Day speech calling out 'intellectual Naxals' has triggered a political clash(நக்சல் விமர்சனம் தொடர்பாக பாஜக காங்கிரஸ் இடையே வெடித்த மோதல்): Clash between BJP and congress over Intellectual Naxal.