வெள்ளை மாளிகைக்கு வாங்க.. பிரதமர் மோடிக்கு அமெரிக்காவிலிருந்து வந்த அழைப்பு! உற்று நோக்கும் சீனா!

  • டெல்லி: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோ, 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்திருக்கிறார். இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய அவர், வெள்ளை மாளிகைக்கு வர வேண்டும் என்று டிரம்ப் விரும்பியதாக அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த அழைப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement

    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சார்பாக, வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளை மாளிகைக்கு வருமாறு அதிகாரப்பூர்வமாக அழைத்துள்ளார். மிக விரைவில் இந்த அரசுமுறைப் பயணம் அமையும் எனத் தெரிகிறது. அடுத்த மாதம் பிரான்சில் நடைபெறவிருக்கும் ஜி-7 (G7) உச்சி மாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    முன்னதாக ரூபியோ, பிரதமர் மோடியை சந்திந்திருந்தபோது, மத்திய கிழக்கில் நிலவி வரும் ஈரான் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் நீரிணை கடல் வழி அடைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து இரு தலைவர்களும் தீவிரமாக விவாதித்தனர். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80%-ஐ இறக்குமதி செய்வதால் இந்த விவாதம் முக்கியத்துவம் பெறுகிறது.

    போர் காரணமாக, அரபு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் அளவு குறைந்திருக்கிறது. உலகம் முழுவதும் போர் இதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், உலகளாவிய எரிசக்தி சந்தையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அமெரிக்கா அனுமதிக்காது என்று ரூபியோ மோடியிடம் உறுதியளித்துள்ளார்.

    Advertisement

    அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள வெனிசுலா கச்சா எண்ணெயை, உலகச் சந்தைக்குக் கொண்டு வர முயற்சிக்கிறது. இந்தியாவுக்கும் இதனை விற்க அமெரிக்கா தயாராக இருப்பதாக ரூபியோ கூறியிருக்கிறார்.

    இது குறித்து விரிவாக பேசவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ராணுவ ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் பங்கை அதிகரிப்பது குறித்தும் அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது. இப்படி இருக்கையில்தான் மோடிக்கு வெள்ளை மாளிகைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. வெள்ளை மாளிகையில் டிரம்ப் உடனான சந்திப்பின்போது இந்த விவகாரம் குறித்து இன்னும் விரிவாக பேசப்படும். எனவேதான் இந்த அழைப்பை சீனா உற்று நோக்கி வருகிறது.

    English Summary

    PM Modi: U.S. Secretary of State Mark Rubio has arrived in India for a four-day visit. Today, after meeting with Prime Minister Narendra Modi, he extended an invitation to him, conveying President Trump's wish for him to visit the White House. This invitation has garnered international attention.