தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக டெல்லிக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் விஜய், இன்று டெல்லியில் உள்ள 'சேவா தீர்த்' (Seva Teerth) வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்.
தமிழ்நாட்டில் கடந்த மே 10-ஆம் தேதி புதிய அரசு அமைந்த பிறகு, பிரதமருடன் நடக்கும் முதல் அதிகாரப்பூர்வச் சந்திப்பு இது என்பதால், தேசிய அளவிலும், தமிழக அரசியல் வட்டாரத்திலும் இந்த சந்திப்பு பெரும் கவனத்தை ஈர்த்ததுள்ளது. ஆனால் எதிர்பார்ப்பு அனைத்தும் வீண் ஆனாது.
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். வழக்கமாக மாநில முதல்வர்கள் பிரதமரைச் சந்திக்கும் போது 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை அந்தச் சந்திப்பு நீடிப்பது வழக்கம். ஆனால், இன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மோடி - விஜய் சந்திப்பு, வெறும் 10 நிமிடங்களிலேயே நிறைவடைந்தது ஒட்டுமொத்த அரசியல் மற்றும் ஊடகத் துறையினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று மாலை 4:27 மணியளவில் இந்தச் சந்திப்பு தொடங்கியது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக 4:37 மணியளவிலேயே சந்திப்பு நிறைவற்று, சரியாக 4:41 மணிக்கு முதலமைச்சர் விஜய்யின் வாகனம் பிரதமரின் இல்ல வளாகத்தில் இருந்து வெளியேறியது. டெல்லி போன்ற உயர் பாதுகாப்பு வளையங்களுக்குள் நுழைந்து, பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திட்டு, பிரதமரின் அறைக்கு நடந்து செல்வதற்கே பொதுவாக 5 முதல் 7 நிமிடங்கள் வரை ஆகிவிடும். அப்படி இருக்கும் போது, இந்தச் சந்திப்பு மிகக் குறுகிய கால அவகாசத்தில், அதாவது வெறும் 10 நிமிடங்களில் முடிந்தது ஏன் என்ற கேள்வி தற்போது டெல்லி மற்றும் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதற்கு முன்பு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி வந்து பிரதமரைச் சந்தித்த போது அந்தச் சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்தது. ஏன், கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி போன்ற பிற மாநிலத் தலைவர்கள் பிரதமரைச் சந்தித்த போது கூட, அந்த ஆலோசனைகள் 25 முதல் 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தன. ஆனால், கொள்கை ரீதியாக முற்றிலும் எதிரெதிர் துருவங்களாகப் பார்க்கப்படும் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் இடையேயான இந்த முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பு இவ்வளவு சுருக்கமாக முடிந்தது ஏன். பிரதமரும் முதலமைச்சரும் சந்திக்கும் சில நிமிடங்களில், கோப்புகளைப் பரிமாறிக்கொள்வது மற்றும் புகைப்படங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. சந்திப்பு மிகக் குறுகிய நேரமே நீடித்திருந்தாலும், தமிழகத்தின் மிக முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் மாநில நலன் சார்ந்த விரிவான கோரிக்கை மனுவை முதலமைச்சர் விஜய் பிரதமரிடம் முறைப்படி சமர்ப்பித்துள்ளார். இந்த மனுவில் இடம்பெற்றுள்ள விபரங்கள் மற்றும் எத்தகைய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள், முதலமைச்சர் அலுவலகம் (CMO) அல்லது பிரதமர் அலுவலகம் (PMO) வெளியிடும் அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கைகளில் முழுமையாகத் தெரியவரும். பிரதமரைச் சந்தித்து முடித்த கையோடு முதலமைச்சர் விஜய், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்குத் திரும்பினார். அங்கு அவருக்குக் காவல்துறை மூத்த அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் முறைப்படி எளிமையான மரியாதை வழங்கி வரவேற்றனர். தமிழ்நாடு இல்லத்தின் வாயிலில் காத்திருந்த செய்தியாளர்கள், பிரதமருடனான 10 நிமிட சந்திப்பில் பேசியது என்ன, என்னென்ன கோரிக்கைகள் வைக்கப்பட்டது என்று கேள்விகளை எழுப்பினர். ஆனால், விஜய் வணக்கம் மட்டும் வைத்துவிட்டு உள்ளே சடசடவென நடந்து சென்றார். இதேபோல் விஜய் முகத்தில்புன்னகை கூட இல்லை. மேலும் இந்த முக்கியமான சந்திப்புக்கு பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுவதற்கோ அல்லது பேட்டி அளிப்பதற்கோ அங்கு மைக், போடியம் போன்ற எந்தவொரு சிறப்பு ஏற்பாடுகளும் முன்கூட்டியே செய்யப்பட்டிருக்கவில்லை. இதனால், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், எவ்விதமாந ரியாக்ஷனும் இல்லாமல் முதலமைச்சர் விஜய் நேராக உள்ளே சென்றார்.முதல்வர் - பிரதமர் சந்திப்பு
10 நிமிட சர்ப்ரைஸ் சந்திப்பு!
மற்ற சந்திப்பு
தமிழக நலன் சார்ந்த கோரிக்கை மனுக்கள்
செய்தியாளர்கள் கேள்விக்கு விஜய் ரியாக்ஷன்!