குழந்தைகள் தவறு செய்வது இயல்புதான்.. தன்னை விமர்சித்த போராட்டக்காரர்கள் குறித்து வீடியோ போட்ட மோடி!

  • டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில், தன்னையும் தனது தாயையும் போராட்டக்காரர்கள் சிலர் விமர்சித்ததாகவும், அப்படி விமர்சித்தவர்களை மன்னிக்க விரும்புவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

    Advertisement

    நீட், சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கரப்பான் ஜனதா கட்சியின் தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள், இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தியிருந்தனர்.

    Advertisement

    இந்த போராட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்கள் போடப்பட்டன. மேலும், மோடியின் தாயாருக்கு எதிராகவும் அவதூறுகள் பேசப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் இப்படியான விமர்சனங்களை முன்வைத்தவர்களை பழிவாங்க விரும்பவில்லை என்று மோடி கூறியிருக்கிறார்.

    இது குறித்து அவர் பதிவிட்டிருக்கும் வீடியோவில், "திட்டுவது மற்றும் அவதூறாக பேசுவது மட்டும் எதுக்கும் தீர்வாகாது. வழிதவறியவர்களுக்கு நாம் வழிகாட்டுவோம். அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். பாரதத்திற்காக உழைப்போம்" என்று கூறியிருக்கிறார்.

    மேலும் தன்னை அவதூறாக பேசியவர்களை தண்டிக்காமல், அக்குழந்தைகளை மன்னித்து விடுவதாக தெரிவித்திருக்கிறார். "குழந்தைகள் தவறு செயல்வது இயல்பு. அவர்களுக்கு சரியான பாதையை காட்டுவது சமூகத்தின் கடமை. நாகரிகமான சமூகத்தில் இப்படியான அவதூறு வார்த்தகளை பயன்படுத்துவது கலாச்சார அதிர்ச்சியளிக்கிறது. இருப்பினும் சட்ட நடவடிக்கைகளை விட அன்பால் அவர்களை நல்வழிப்படுத்துவதே சிறந்தது என்றும் கூறியிருக்கிறார்.

    Advertisement

    நாட்டின் வளர்ச்சிக்காக இளைஞர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாத்திட தேர்வு முறைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

    பிரதமரின் இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. போராட்டக்காரர்கள் சற்று பொறுமையாக இருந்திருக்கலாம் எனவும், தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி மற்றும் அவரது தாய் குறித்த விமர்சனங்களை குறைத்திருக்கலாம் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.

    English Summary

    PM Modi: Prime Minister Narendra Modi has stated that some protesters criticized both him and his mother during the agitation at Delhi's Jantar Mantar, and that he wishes to forgive those who criticized them.