நள்ளிரவில் பிரதமர் மோடிக்கு வந்த கால்.. லைனில் அமெரிக்க துணை அதிபர்! போனில் முடிக்கப்பட்ட டீலீங்

  • டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு நள்ளிரவில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்திருக்கிறது. இதில், இரு நாட்டு உறவு குறித்து விரிவாக பேசப்பட்டிருக்கிறது.

    Advertisement

    இது குறித்து தனது x பக்கத்தில் மோடி பகிர்ந்திருப்பதாவது, "அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. முக்கிய துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையிலான விரிவான கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்" என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    மேலும் சமீபத்தில் வேன்ஸ்-உஷா தம்பதிக்கு குழந்தை பிறந்தது. இதை குறிப்பிட்டு, தம்பதிக்கு மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

    இருநாட்டு உறவு

    சீனாவின் ஆதிக்கம் பல்வேறு துறைகளிலும் அதிகரித்திருக்கும் இந்த சூழலில், மோடி-வேன்ஸ் உரையாடல் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை, அமெரிக்காவுடன் பல்வேறு துறைகளில் இணைந்து செயலாற்றி வருகிறது. குறிப்பாக இருநாடுகளும் பாதுகாப்பு ஆயுதங்களை ஒன்றாக சேர்ந்துதான் உற்பத்தி செய்கின்றன. இது போக.. ராணுவ விமானங்களுக்கான ஜெட் என்ஜின்களையும் அமெரிக்காவுடன் சேர்ந்து.. இந்தியா தயாரித்து வருகிறது.

    யுத் அபியாஸ், மலபார் போன்ற கூட்டு பயிற்சிகள் மூலமாகவும் இரு நாடுகளும் ராணுவ ஒத்துழைப்பை அதிகரித்து வருகின்றன. அதைவிட முக்கியமான விஷயம், இந்தோ-பசிபிக் பகுதியில் சுதந்திரமான கடல் வழி போக்குவரத்தை உறுதி செய்ய.. குவாட் அமைப்பின் மூலம் இந்தியா, அமெரிக்காவுடன் இணைந்து கடல்சார் பாதுகாப்பை மேற்கொண்டு வருகிறது.

    Advertisement

    இதுபோக வர்த்தகம், காலநிலை மாற்றம், தூய்மை எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு போன்றவற்றிலும் இரு நாடுகளும் சேர்ந்து பயணிக்கின்றன. எனவேதான் மோடி-வேன்ஸ் உரையாடல் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

    English Summary

    Prime Minister Narendra Modi received a phone call from US Vice President J.D. Vance late at night. During the call, they held a detailed discussion regarding the relationship between the two countries.