நள்ளிரவில் மோடி வெளியிட்ட வீடியோ.. வினாத்தாள் கசிவுக்கு வருகிறது புதிய சட்டம்.. இன்று விவாதம்

  • டெல்லி: 'நீட்' வினாத்தாள் கசிவு தொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் நடந்து வரும் போராட்டம் தொடர்ந்து வீரியமாகி வரும் நிலையில் நள்ளிரவில் பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வினாத்தாள் கசிவு தொடர்பாக விரைவில் கடும் தண்டனை வழங்கும் புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான வரைவு திட்டம் தனது கையில் உள்ளதாகவும், இதுபற்றி இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

    Advertisement

    'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு மாணவர் அமைப்பினர் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமாகி வருகிறது.

    Advertisement

    இந்நிலையில் தான் இன்று நள்ளிரவில் பிரதமர் மோடி முக்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: ''வினாத்தாள் கசிவு என்பது சிறிய விஷயமல்ல என்பதை நான் நன்கு அறிவேன். இது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. இதனால் கடந்த இரண்டரை மாதங்களில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    மாணவர்களின் கல்வியாண்டு வீணாகாமல் தடுப்பதை உறுதி செய்வது தான் எங்களின் முதன்மையாக பொறுப்பா இருந்தது. இதனால் தான தேர்வுகளை விரைவாக நடத்துவது மிக அவசியமாக இருந்தது. 22 லட்சம் மாணவர்களுக்கான தேர்வுகளை மிக குறுகிய காலத்தில் நடத்த அரசு தனது அனைத்து வளங்களையும் பயன்படுத்தியது.

    Advertisement

    இதற்கான தேர்வு முடிவுகள் (நீட் மறுதேர்வு முடிவுகள்) கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் வெற்றி மற்றும் மகிழ்ச்சி குறித்த செய்திகள் வந்து கொண்டிருந்தது. அதோடு திருப்தி அடைந்து அமைதியாக இருப்பவர்கள் நாங்கள் அல்ல. இதனால் தான் வினாத்தாள் கசிவு தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்கும் வகையில் விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுரை வழங்கினேன்.

    இரவு வரை வெகுநேரம் உழைத்து துறை அதிகாரிகள் என்னிடம் வரைவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளனர். விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளுக்கான அம்சங்களைக் கொண்ட இந்த வரைவுத் திட்டம் நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். அமைச்சரவை சகாக்களின் ஆலோசனைகளை கேட்டு அதுபற்றி இறுதி செய்யப்படும்.

    Advertisement

    மேலும் வரும் திங்கட்கிழமை தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே இந்த மசோதாவை சபையில் நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்'' என்றார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி வினாத்தாள் கசிவு பற்றி விசாரித்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க விரைவு நீதிமன்றம் அமைப்பதாக கூறியிருந்தார். அதன்படி நேற்று நள்ளிரவில் விரைவு நீதிமன்றம் அமைப்பதற்கான உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய நிலையில் பிரதமர் மோடி அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக இந்த வீடியோவில் கூறியுள்ளார்.

    English Summary

    Amidst the intensifying protests in Delhi regarding the NEET question paper leak, Prime Minister Modi released a video late at night. He assured that a new law imposing severe penalties for such leaks is set to be introduced soon; he stated that the draft proposal is already with him and will be discussed at the Cabinet meeting scheduled for today (Friday).