டெல்லி: தேர்தல் ஆணையர்கள் இருவர், தலைமை ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் மத்திய அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்ததாக இந்திய எக்ஸ்பிரஸ் செய்தியை வெளியிட்டிருந்தது. ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று நேற்று வரை சொல்லிக்கொண்டிருந்த தேர்தல் ஆணையம் (ECI), இன்று கடிதம் எழுதியதை ஒப்புக்கொண்டிருக்கிறது. இருப்பினும் ஞானேஷ் குமாருக்கு எதிராக கடிதம் எழுதப்படவில்லை என்று கூறியிருக்கிறது.
பாஜக மத்தியில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் பல்வேறு விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. இந்த அதிருப்தி வரிசையில்.. தற்போது ஞானேஷ் குமாருக்கு எதிரான குற்றச்சாட்டும் இணைந்திருக்கிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை மொத்தம் 3 ஆணையர்கள் இருப்பார்கள். தலைமை ஆணையர் ஒருவர் (ஞானேஷ் குமார்), 2 சாதாரண ஆணையர்கள் (விவேக் ஜோஷி மற்றும் சுக்பீர் சிங் சாந்து) இருப்பார்கள். ஆணையம் ஏதேனும் முக்கியமான முடிவை எடுக்க வேண்டும் எனில், 3 பேரும் சேர்ந்துதான் எடுக்க வேண்டும். தன்னிச்சையான முடிவு ஆனால், கடந்த சில மாதங்களாக எங்களை ஞானேஷ் குமார் கழற்றிவிட்டுவிட்டார் என்று ஆணையர்கள் இருவரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். கடந்த ஜூலை 29ம் தேதி மத்திய அமைச்சரவை செயலாளருக்கு இருவரும் இது குறித்து கடிதம் எழுதியிருந்தனர். அந்த கடிதத்தில் SIR தொடர்பாக எடுக்கப்பட்ட பல முடிவுகளில் எங்களது ஆலோசனையை கேட்கவில்லை என்று தெரிவித்திருந்தாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தி வெளியாகி நாடு முழுவதும் பெரும் விவாதங்கள் வெடித்த நிலையில், அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று தேர்தல் ஆணையத்தரப்பு விளக்கமளித்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறித்து அடுத்தடுத்து சந்தேகங்களை கிளப்பின. இப்படி இருக்கையில் இந்த விஷயத்தில் தற்போது ஆணையம் புது விளக்கத்தை முன்வைத்திருக்கிறது. கடிதம் எழுதியது உண்மைதான், ஆனால்.. நீங்கள் நினைப்பதை போல கிடையாது! இது சாதாரண மேட்டர் என்று கூறியிருக்கிறது. அதாவது இந்த கடிதம் தலைமை தேர்தல் ஆணையரின் செயல்பாடுகள் பற்றியது கிடையாது. மாறாக தற்காலிக பணியில் இருக்கும் ஒரு மூத்த துணை தேர்தல் ஆணையரை பற்றியது. தேர்தல் ஆணையத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால், ஒருபோதும் முடிவுகள் தன்னிச்சையாக எடுக்கப்படுவதில்லை. கூட்டு முடிவாகத்தான் எடுக்கப்படுகிறது. ஒருவேளை இந்த கடிதம் ஞானேஷ் குமாருக்கு எதிரானதாக இருந்திருந்தால்.. அது ஏன் அமைச்சரவை செயலாளருக்கு அனுப்பப்படப்போகிறது? அது குடியரசுத் தலைவருக்கு அல்லவா அனுப்பப்பட்டிருக்க வேண்டும்? என்று கேள்வியை எழுப்பியிருக்கிறது. ஆனால், இந்த விளக்கங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள காக்ரோச் ஜனதா கட்சியோ(CJP) அல்லது எதிர்க்கட்சிகளோ ரெடியாக இல்லை. ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து அக்.2 தேதியன்று CJP நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.என்ன பஞ்சாயத்து?
தேர்தல் ஆணையத்தின் மீதான விமர்சனம்
புதிய விளக்கம்
போராட்டம் கன்பார்ம்