மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமனம்.. தர்மேந்திர பிரதான் ராஜினாமாவால் கூடுதல் பொறுப்பு!

  • டெல்லி: மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாணவர்கள் போராட்டத்தால் மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை அடுத்து, பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் மத்திய அரசு, மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

    Advertisement

    இந்நிலையில், தர்மேந்திர பிரதான் தனது ராஜினமாவை இன்று அறிவித்தார். "இளைஞர்களின் விருப்பங்கள், கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நான் ஆழமாக மதிக்கிறேன். ஜந்தர் மந்தரிலும் நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் தங்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதை நான் அனுமதிக்க மாட்டேன். நாட்டின் ஒற்றுமை பேணப்பட வேண்டும். இதை மனதில் கொண்டு, எனது ராஜினாமாவை பிரதமருக்கு அனுப்பியுள்ளேன்." எனத் தெரிவித்தார்.

    இந்நிலையில், தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை அடுத்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக இருந்து வருகிறார் பிரகலாத் ஜோஷி. இந்நிலையில், அவருக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ளது.

    English Summary

    Union Minister Pralhad Joshi has been given additional charge of the Education Ministry after President Droupadi Murmu accepted Dharmendra Pradhan's resignation on the Prime Minister's advice.