சீண்டும் பாகிஸ்தான்.. ஜனாதிபதி முர்மு கொடுத்த வார்னிங்.. சுதந்திர உரையை கவனிச்சீங்களா! அதிரடி

  • டெல்லி: ''பயங்கரவாதத்திற்கு அடைக்கலம் கொடுக்கும் ஒரு நாட்டுடனான (பாகிஸ்தான்) சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நம் நாடு நிறுத்தி வைத்துள்ளது. பயங்கரவாதிகளும், அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களும் எங்கு ஒளிந்திருந்தாலும் அதற்கான விளைவுகளை அனுபவிக்க நேரிடும்'' என்று நம்மை சீண்டும் பாகிஸ்தானுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு வார்னிங் கொடுத்துள்ளார்.

    Advertisement

    நாளை நம் நாட்டின் 80வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு சுதந்திர தினத்துக்கு முன்பாகவும் நம் நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் இன்று இரவு 7 மணிக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு நம் நாட்டு மக்களுக்காக உரையாற்றினார்.

    Advertisement

    அப்போது நம்மை சீண்டும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில கருத்துகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு தனது உரையின் வாயிலாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திரெளபதி முர்மு கூறியதாவது:

    ''பயங்கரவாதத்திற்கு அடைக்கலம் கொடுக்கும் ஒரு நாட்டுடனான (பாகிஸ்தான்) சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நம் நாடு நிறுத்தி வைத்துள்ளது. இது நம் நாட்டின் நாட்டின் நலன் கருதியும், குறிப்பாக விவசாயிகளின் நலன் கருதியும் எடுக்கப்பட்ட ஒரு தீர்க்கமான நடவடிக்கை.
    பயங்கரவாதிகளும், அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களும் எங்கு ஒளிந்திருந்தாலும் அதற்கான விளைவுகளை அனுபவிக்க நேரிடும்.

    பயங்கரவாத கட்டமைப்புகளுக்கு எதிராக துல்லியமான தாக்குதல்களை நடத்தும் நம் நாட்டின் ஆயுதப்படைகளின் திறன் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் வழியாக நிரூபிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

    English Summary

    President Droupadi Murmu address to Nation: "Our country has suspended the Indus Waters Treaty with the nation (Pakistan) that harbors terrorism. Wherever terrorists and their supporters may be hiding, they will have to face the consequences," President Droupadi Murmu warned Pakistan, which has been provoking us.