ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பதற்றம்.. டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி உட்பட 700க்கும் மேற்பட்டோர் கைது

  • டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் முதல்வர் அதிஷி உட்பட 700க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

    Advertisement

    இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR நடவடிக்கை ஏற்கெனவே எதிர்க்கட்சிகளை டென்ஷனாக்கியிருந்தது. இப்படி இருக்கையில்தான் தேர்தல் ஆணையர்கள் இருவர், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது அதிருப்தி தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

    Advertisement

    அதாவது SIR நடவடிக்கை தொடர்பாக, 14 முறை ஞானேஷ் குமாரின் செயல்களுக்கு இரண்டு ஆணையர்களும் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். ஆனால், அதையெல்லாம் அவர் கண்டுக்கொள்ளாமல், தன் இஷ்டத்திற்கு எல்லா விஷயங்களையும் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. எனவே ஞானேஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. குறிப்பாக காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அக்.2ம் தேதி போராட்டத்தை அறிவித்தது.

    பதவி விலக ரெண்டு நாள் டைம் தரோம்.. அதுக்குள்ள ராஜினாமா செய்தா சமாதானம்! இல்லைன்னா சண்டை! என்று CJP டைம் கொடுத்தது. ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யவில்லை. எனவே டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று CJPக்கு ஆதரவாக இடதுசாரி மாணவர் இயக்கங்களும், ஆம் ஆத்மி கட்சியும் போராட்ட களத்தில் இறங்கின. போராட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி, சிபிஎம் தலைவர் பிருந்தா காரத் உட்பட 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த கைது நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. போராட்டத்தில் AISA, SFI, NSUI உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் பங்கேற்றிருந்தன.

    Advertisement

    CJP அறிவித்த போராட்டம்

    CJP மும்பை சிவாஜி பூங்காவில் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தது. ஆனால், மகாராஷ்டிரா காவல் துறை இந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. பெர்மிஷனே கொடுக்கவில்லை என்றாலும் பராவாயில்லை.. நாங்கள் நிச்சயம் போராட்டம் நடத்துவோம். மீறி கைது செய்தால், சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட தயார் என்றும் CJP தலைவர்கள் கூறியிருக்கின்றனர். இதன் காரணமாக சிவாஜி பார்க் கேட் 6 அருகே இளைஞர்கள் குவிய தொடங்கியுள்ளனர். மாலை 4 மணிக்கு இந்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதே போல, நீட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று CJP போராட்டத்தை நடத்தியிருந்தது. நாடு முழுவதும் நெருப்பு போல இந்த போராட்டம் பரவியது. இதையடுத்து பிரதான் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Protest Against CEC: A massive protest has erupted at Delhi's Jantar Mantar demanding the resignation of Chief Election Commissioner Gyanesh Kumar of the Election Commission of India. More than 700 people, including former Chief Minister Atishi, were arrested while participating in the protest.