எம்பிக்கள் ‘ஸ்மார்ட் வாட்ச்’ அணியவும் – போராடவும் தடை.. நாடாளுமன்ற லோக்சபா செயலகம் அறிவிப்பு

  • டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் எம்பிக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்திற்குள் போராட்டம் நடத்தவும், தர்ணா செய்யவும், பதாகைகள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி எம்பிக்கள் ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடிகள் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.

    Advertisement

    இந்நிலையில் தான், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க உள்ள எம்பிக்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் லோக்சபா செயலகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    ''நாடாளுமன்ற வளாகத்தில் எலக்ட்ரானிக் டிவைஸ்களான ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடிகள், கேமராவுடன் இருக்கும் பேனாக்கள் எடுத்து செல்ல அனுமதி கிடையாது. யாருக்கும் தெரியாமல் போட்டோ, வீடியோ எடுப்பதை தடுக்கவும், எம்பிக்களின் தனியுரிமையை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாடாளுமன்றத்தின் மாண்பை காக்க வேண்டும் என்பதற்காக சில முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, அரசியல் சார்ந்த போராட்டம், பதாகைகள் எடுத்து செல்ல அனுமதி கிடையாது. ஆயுதங்கள் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் மதங்கள் சார்ந்த நிகழ்ச்சிகள், பூஜைகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனை அனைத்து எம்பிக்களும் முறையாக பின்பற்றி நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மற்றும் மாண்பை காக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த கட்டுப்பாடுகளுக்கு பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளதாக கூறப்படுகிறது. நடைபெற உள்ள மழைக்கால கூட்டத்தொடரில் வெளிநாட்டில் இருக்கும் பெறும் நிதிகளை கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2026 கொண்டு வரப்பட உள்ளது. இதுதவிர விக்சித் பாரத் ஷிக்‌ஷா அதிஷ்தான் பில் 2026, வருமான வரி (திருத்தம்) மசோதா 2026), உச்சநீதிமன்றம் (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா (2026), தேசிய கவுரவம் அவமதிப்பை தடுக்கும் (திருத்தம்) மசோதா 2026, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு (திருத்தம்) மசோதா 2026 உள்ளிட்டவை கொண்டு வரப்பட உள்ளது.

    Advertisement

    இதுதவிர கடந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தொகுதி மறுவரையறை மற்றும் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா உள்ளிட்டவற்றையும் மத்திய அரசு கொண்டு வர நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இதனால் எதிர்க்கட்சியினர் வழக்கம்போல் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது. இதனால் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த கட்டுப்பாடுகளுக்கு தற்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்பி சு வெங்கடேஷன் தனது எக்ஸ் பக்கத்தில், ''வந்தே மாதரம் பாடவில்லையென்றால் சட்டவிரோதம் என்பது துவங்கி நாடாளுமன்ற வளாகத்திற்குள் போராட்டம் நடத்துதல், பதாகை காட்டுதல் ஆகியவற்றுக்குத் தடை!'' என்பது வரை.. கொடிய சட்டங்களுடன், புதிய தடைகளுடனும் மழைக்கால கூட்டத்தொடருக்கு தயாராகிவிட்டது பாஜக'' என விமர்சனம் செய்துள்ளார்.

    English Summary

    The Parliament Monsoon Session is set to begin on the 20th of this month. Amidst this, new restrictions have been imposed on Members of Parliament (MPs). Protests, sit-ins (dharnas), and the use of placards within the Parliament complex have been banned. Furthermore, MPs are prohibited from wearing smartwatches and smart glasses. While MPs are expressing strong opposition to these new measures, let us look at the background behind them.