போராட்டக் களமா? திறந்தவெளி சிறையா? ஏஐ கேமராவால் கண்காணிக்கும் டெல்லி போலீஸ்! கொந்தளிக்கும் மாணவர்கள்

  • டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் மாணவர்களை முகத்தை வைத்து அடையாளம் கண்டறியும் Facial Recognition தொழில் நுட்பம் கொண்ட கேமராக்களுடன் கூடிய வேன்களை டெல்லி போலீசார் நிறுத்தியுள்ளனர். மாணவர்களின் தனிப்பட்ட உரிமையை மீறும் வகையில் நடந்து கொள்ளும் டெல்லி போலீசாருக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எந்த விதிகளின் படி இந்த தரவுகளை போலீசார் சேமிக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

    Advertisement

    டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலகியே தீர வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தர்மேந்திர பிரதான் பதவி விலகியே தீர வேண்டும் என மாணவர்கள் இளைஞர்கள் உறுதியுடன் உள்ளனர்.

    Advertisement

    மத்திய அரசு அவர்களுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இரண்டும் தோல்வி அடைதுள்ளது. இன்றும் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிகிறது. இது ஒருபக்கம் இருக்க டெல்லியில் போராட்ட களத்தில் போலீசாரின் அடக்குமுறையும் மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் அதி அவீன ஏஐ கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.


    ஏஐ கேமராவுடன் சுற்றும் போலீசார்

    ஏஐ கேமராவுடன் போலீசார் அங்கே சுற்றி வருகின்றனர். அருகிலேயே உள்ள வேன் மூலம் இவர்களின் முகங்கள் அடையாளம் காணப்பட்டு உடனுக்குடன் ஆக்சன் எடுக்கப்படுகிறது. அதாவது போராடினால் போலீசார் ரகசிய கேமராவில் உங்களை பதிவு செய்து பின்னணியை எடுக்கும் நோக்கில் ஏஐ கேமராவுடன் சுற்றுவதாக இளைஞர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும் இது போராட்ட இடமா? இல்லை திறந்த வெளி சிறைச்சாலையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

    Advertisement

    இது தொடர்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் தளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை உடனுக்கு உடன் நேரலையாக கண்டறிய டெல்லி முக அடையாளம் காணும் வேன்களை நிறுத்தியுள்ளது. அவர்கள் சம்பவ இடத்திலேயே பயோமெட்ரிக் தரவுகளையும் தனிப்பட்ட தரவுகளையும் சேகரித்து வருகிறார்கள். இது தொடர்பாக எங்களிடம் மூன்று கேள்விகள் உள்ளன.

    3 கேள்விகள் எழுகிறது?

    இது சட்டப்பூர்வமனதா? தனியுரிமை என்பது ஒருவரின் அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.தங்கள் உரிமையின் அடிப்படையில் போராட்டம் நடத்துபவர்களை மாஸ் ஸ்கேன் செய்வது அரசியலமைப்புக்கு முரணானது.

    Advertisement

    இந்த தரவுகள் எங்கிருந்து வருகின்றன? இந்த தரவுகள் எந்த மாதிரியாக பயன்படுத்தப்படும். இந்த முக ஸ்கேன்களை யார் சேமித்து வைக்கிறார்கள்? அவை எவ்வளவு காலம் பாதுகாக்கப்படும்? மாணவர்களை மறைமுகமாகத் அச்சுறுத்தவும், குறிவைக்கவும் ரகசியப் பதிவேடுகள் உருவாக்கப்படுகின்றனவா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

    English Summary

    The Delhi Police have deployed vans equipped with facial recognition cameras to identify students participating in protests in Delhi. The 'Karappan Poochi Janata Party' has strongly opposed the Delhi Police's actions, viewing them as a violation of the students' right to privacy. Questions have also been raised regarding the specific regulations under which the police are storing this data.