டெல்லியில் 3 நாட்கள் தங்கும் புதின்.. ஆனாலும் இந்திய தண்ணீரை குடிக்க மாட்டார்! காரணம் இதுதான்!

  • டெல்லி: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லி வந்திருக்கும் ரஷ்ய அதிபர் புதின், 3 நாட்கள் இந்தியாவில் தங்குகிறார். ஆனாலும், இந்தியாவின் தண்ணீரை அவர் குடிக்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவருக்குகாக ரஷ்யாவிலிருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

    Advertisement

    பிரிக்ஸ் மாநாடு நாளைதான் தொடங்குகிறது. ஆனால், ஒருநாள் முன்னாடியே.. புதின் இன்று அதிகாலை டெல்லி வந்துவிட்டார். டெல்லி ஐடிசி மௌரியா ஒட்டலில்தான் புதின் மற்றும் அவரது குழுவுடன் தங்குகிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முழு ஓட்டலும் புதின் மற்றும் அவரது குழுவினருக்காக மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    ஓட்டலை சுற்றி டெல்லி போலீசும், ஓட்டலுக்குள் ரஷ்ய அதிபர் பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். அதேபோல புதினுக்கு தேவையான உணவை தயாரிப்பதும் சுவாரசியமான விஷயமாக இருக்கிறது. புதினுக்கு தேவையான உணவை நேரடியாக ஓட்டல் ஊழியர்கள் தயாரிக்க மாட்டார்கள். ரஷ்யாவிலிருந்து அவருடன் வந்த சமையல் கலைஞர்கள்தான் இந்த உணவை தயாரிப்பார்கள். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், இந்த உணவுக்கு தேவையான காய்கறிகள், இறைச்சி, குடிநீர் உட்பட அனைத்து பொருட்களும் ரஷ்யாவிலிருந்து கொண்டுவரப்படும்.

    காரணம் உலகின் மிகக் கடுமையான பாதுகாப்பு வளையத்தை கொண்ட தலைவர்களில் புதினும் ஒருவர். புதினுக்கு எதிரிகள் அதிகம் என்பதால்தான் இந்த நடைமுறையை ரஷ்ய உளவு அமைப்புகள் பின்பற்றுகின்றன. எதிரிகள் அதிகம் என்பதால் உணவு அல்லது நீரில் விஷம் கலக்க வாய்ப்புகள் அதிகம். எனவே ரஷ்ய அதிபரின் பாதுகாப்பு படையான FSO விதிமுறைகளின்படி, புதினுக்கு வழங்கப்படும் குடிநீர் முதல் சமையல் பொருட்கள் வரை அனைத்தும் முன்பே பரிசோதிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள நீரின் தன்மையை உடனடியாக 100% நம்ப முடியாது என்பதால், அவர்கள் சொந்த நாட்டு தண்ணீரையே கொண்டு வருகிறார்கள்.

    Advertisement

    இங்கு மட்டுமல்ல எங்கு சென்றாலும் புதின் தனியாக தண்ணீர் பாட்டிலை கையில் வைத்திருப்பார். அதில் உள்ள நீரை மட்டும்தான் குடிப்பார். எந்தவொரு சர்வதேச மாநாட்டுக்கு போனாலும் அங்கு வைக்கப்படும் கண்ணாடி டம்ளர்களில் தண்ணீர் குடிக்க மாட்டார். தனக்கென பிரத்தேயகமாக வடிவமைக்கப்பட்ட வெள்ளை நிற தெர்மாஸ் கோப்பையை தான் எப்போதும் கையில் வைத்திருப்பார். இப்போது டெல்லி பிரிக்ஸ் மாநாட்டிலும் அவர் இதையே பயன்படுத்துகிறார்.

    திடீரென புதிய இடங்களில் தண்ணீர் மற்றும் உணவை உட்கொள்ளும்போது ஏற்படும் அலர்ஜி அல்லது உடல்நலக்குறைபாடுகளை தவிர்க்கவே இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

    பிரதமர் நரேந்திர மோடிக்கு இவ்வளவு கடுமையான நடைமுறைகள் கிடையாது. நம்முடைய பிரதமர் வெளிநாடுகளுக்கு போகிறார் எனில், அவர் தங்கும் ஓட்டலில் உள்ள சமையலையை பிரதமரின் பாதுகாப்பு பிரிவினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவார்கள். அவர்கள் சமைக்க மாட்டார்கள், அங்குள்ள தலைமை சமையரிடம் சமைக்க சொல்லி, பின்னர் அந்த உணவு அனைத்து பாதுகாப்பு சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு பின்னர்தான் மோடிக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Putin: Russian President Putin, who has arrived in Delhi to attend the BRICS summit, is staying in India for three days. However, reports indicate that he will not drink Indian water; instead, water has been brought in for him from Russia.