Qatar Gas Plant: கத்தார் தீவிபத்தில் நெல்லையை சேர்ந்த 3 பேர் பலி! யார் அவர்கள்?

  • டெல்லி: கத்தார் நாட்டில் இயற்கை எரிவாயு தொழிற்சாலையில் நடந்த தீவிபத்தில் நெல்லையைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    கத்தாரின் ராஸ்லபான் தொழிற்பேட்டையில் இயற்கை எரிவாயு தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த ஆலை ஈரான் தாக்குதலால் சேதம் அடைந்தது. இதனால் அந்த ஆலை செயல்படாமல் இருந்து அது சீரமைக்கப்பட்டு தற்போது மீண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    Advertisement

    இந்த நிலையில் இந்த தொழிற்பேட்டையில் உள்ள எரிவாயு ஆலை ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்டது. அப்போது தீ மளமளவென பரவியது. இந்த விபத்தில் 12 இந்தியர்கள் உள்பட 13 பேர் பலியாகிவிட்டனர். 66 பேர் காயமடைந்தனர்.

    இந்த நிலையில் இந்த கத்தார் தீவிபத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துவிட்டனர். கத்தார் கேஸ் நிறுவனத்தில் பணியாற்றிய நெல்லை பணகுடி சிவகாமிபுரத்தை சேர்ந்த சுர்ஜித், சுவின், சிதம்பராபுரத்தைச் சேர்ந்த பபித் ஆகியோர் உயிரிழந்தனர்.

    English Summary

    Qatar Gas Plant Fire: Two people from Tirunelveli lost their lives in a fire accident at a natural gas plant in Qatar, causing grief among family members and locals.