பாஜக எம்பி ராகவ் சத்தா பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்.. SIRல் சிக்கினார்

  • டெல்லி: பஞ்சாபில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்த மாநிலங்களவை எம்பி ராகவ் சத்தாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர் என சொல்லி அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

    Advertisement

    கடந்தாண்டு முதலே நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களிலும் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்து வருகிறது. முதலில் பீகாரில் எஸ்ஐஆர் பணிகள் நடந்த நிலையில், அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, மேற்கு வங்கம் என பல மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி இப்போது பஞ்சாப் மாநிலத்திலும் எஸ்ஐஆர் பணிகள் நடக்கிறது.

    Advertisement

    ராகவ் சத்தா

    அங்கு நடந்த எஸ்ஐஆர் பணிகளில் தான் ராகவ் சத்தா பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த ராகவ் சத்தா கடந்த 2022 முதல் பஞ்சாபில் இருந்து ஆம் ஆத்மி கட்சி ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர். நாடாளுமன்றத்தில் அவரது செயல்பாடுகளால் அவர் கவனிக்க வைத்திருந்தார். இருப்பினும், கடந்த சில மாதங்களாக அவருக்கும் ஆம் ஆத்மி தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தது. இந்த சூழலில் தான் அவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆம் ஆத்மியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார். அவருடன் மேலும் 6 மாநிலங்களவை எம்பிக்களும் பாஜகவில் இணைந்ததால் கட்சி தாவல் நடவடிக்கையில் இருந்தும் அவர் தப்பினார்.

    Advertisement

    பாஜக

    இப்போது பாஜக சார்பில் அவர் எம்பியாக இருக்கும் நிலையில், அவரது பெயர் தான் பஞ்சாப் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியிடப்பட்ட ASDD (Absent, Shifted, Deceased and Duplicate) பட்டியலில் ராகவ் சத்தாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவரது பெயருக்கு எதிராக 'Permanently Shifted', அதாவது நிரந்தரமாக குடிபெயர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    எஸ்ஐஆர் பணிகளில் பஞ்சாபின் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் 20.66 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. அதாவது மொத்த வாக்காளர்களில் சுமார் 9.7 சதவீதம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

    Advertisement

    ஆம் ஆத்மி

    இதற்கிடையே தனது வாக்காளர் பெயர் நீக்கப்பட்டதற்கு பஞ்சாப் ஆம் ஆத்மி அரசே காரணம் என ராகவ் சத்தா குற்றஞ்சாட்டியுள்ளார். தனது வாக்காளர் அடையாள அட்டை மொஹாலியில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னை எப்படி 'இடம்பெயர்ந்தவர்' என குறிப்பிட முடியும் என்று ராகவ் சத்தா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இப்போது வரைவு வாக்காளர் பட்டியலே வெளியிடப்பட்டுள்ளதாகவும் மீண்டும் வாக்காளர் பட்டியலில் தனது பெயரை இணைக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    குற்றச்சாட்டு

    மேலும், தனது பெயர் நீக்கப்பட்டது வெறும் அலுவலக ரீதியான தவறு அல்ல என்றும் இது தெளிவான அரசியல் பழிவாங்கல் என்றும் ராகவ் சத்தா குற்றம்சாட்டியுள்ளார். அவர் மேலும், "நான் ஊழல் நிறைந்த ஆம் ஆத்மி கட்சியை விட்டு வெளியேறியதில் இருந்து, அந்த கட்சியின் தலைமை கோபத்தில் உள்ளது. ஆம் ஆத்மியில் இருந்து விலகிய எம்பிக்கள் பாஜகவில் இணைந்ததற்காக பஞ்சாப் அரசால் குறிவைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

    Advertisement

    37 வயதான ராகவ் சத்தா, கடந்த ஏப்ரல் மாதம் ஆம் ஆத்மி கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார். ஆம் ஆத்மி தனது கொள்கைகள், மதிப்புகளில் இருந்து முழுமையாக விலகிவிட்டதாக அவர் கூறியிருந்தார். அதே நேரத்தில் ராகவ் சத்தாவை சந்தர்ப்பவாதி என்று ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது.

    English Summary

    Rajya Sabha MP Raghav Chadha's name has reportedly been removed from Punjab's draft voter list(எஸ்ஐஆர் பட்டியல் ராகவ் சத்தா பெயர் நீக்கம்): Raghav Chadha latest news in tamil.