பஞ்சாப் எம்பி.. ஆனா டெல்லி முகவரியில் ஓட்டர் ஐடி! எப்படி திமிங்கலம்? சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்பி!

  • டெல்லி: நான் பஞ்சாப்காரன் ஆனால், என்னுடைய பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து ஆம் ஆத்மி அரசு நீக்கிவிட்டது என்று, பாஜக எம்பி ராகவ் சதா குற்றம் சாட்டியிருந்தார். இருப்பினும், மறுபுறம் கமுக்கமாக டெல்லி வாக்காளராக தன்னை பதிவு செய்திருக்கிறார். இது தொடர்பான விஷயங்கள் வெளிவந்த நிலையில், ராகவ் சதாவுக்கு எதிரான விமர்சனங்கள் சூடுபிடித்திருக்கின்றன.

    Advertisement

    ராகவ் சதா வேறு யாரும் கிடையாது.. கடந்த 2022ம் ஆண்டு பஞ்சாபிலிருந்து மாநிலங்களவை எம்பியாக ஆம் ஆத்மி கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் இவர். இருப்பினும் கடந்த ஏப்ரல் மாதம் இவர் பாஜகவுக்கு ஜம்ப் அடித்துவிட்டார்.

    Advertisement

    இப்படி இருக்கையில் டெல்லிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு ஆக.31 முடிக்கப்பட்டது. இந்த பட்டியலில் ரஜேந்திர நகர் சட்டமன்ற தொகுதியின் கீழ் வரும் வாக்குச்சாவடி எண் 46ல், மொத்தம் 746 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது திடீரென இந்த எண்ணிக்கை 747ஆக அதிகரித்திருக்கிறது. யாருப்பா அந்த ஒரு ஆள் என்று தேடி பார்த்தால்.. எம்பி ராகவ் சதாவின் முகம் தெரிந்திருக்கிறது. எனவே உடனடியாக ஆம் ஆத்மி இது குறித்து பஞ்சாயத்தை கிளப்பியிருக்கிறது.

    ஆக.31 அன்று 746 ஆக இருந்த எண்ணிக்கை என்பது செப்.3ம் தேதிக்குள்.. வெறும் 3 நாட்களில் 747ஆக அதிகரிக்கும்? என்று ஆம் ஆத்மி சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. மத்திய பாஜக அரசின் அழுத்தம் காரணமாவே ராகவ் சாதவின் பெயரை தேர்தல் ஆணையம் உள்ளே நுழைத்திருப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறது.

    Advertisement

    இப்படி சந்தேகம் ஒருபக்கம் இருக்க.. ராகவ் சதாவின் பேச்சு, தவளை தன் வாயால் கெடும் என்பதை போல இருந்திருக்கிறது. செப்.3 அன்று பஞ்சாப் வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்டபோது, ஆம் ஆத்மி அரசு தன் மீது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக ராகவ் சதா கொதித்தெழுந்தார். தான் பஞ்சாபின் நிரந்தர குடிமகன் என்றும், மீண்டும் பஞ்சாபின் வாக்காளராக பதிவு செய்ய போராடுவேன் என்றும் இஷ்டத்திற்கு பேசியிருந்தார்.

    ஆனால், பஞ்சாபில் அப்படி பேசிவிட்டு அடுத்த சில நாட்களிலேயே டெல்லியில் ரகசியமாக வாக்காளராக பதிவை முடித்துள்ளார். பஞ்சாபில் பழிவாங்குகிறார்கள் என்று கூறிவிட்டு, டெல்லியில் எப்படி உடனே வாக்காளர் ஆனார்? என்று ஆம் ஆத்மி பாயிண்டை பிடித்து விமர்சித்திருக்கிறது.

    Advertisement

    இந்த பஞ்சாயத்துக்கு நடுவில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்திருக்கிறது. டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி இது குறித்து கூறுகையில், "இந்த விஷயத்தில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை. ராகவ் சதா ஆக.26 அன்றே டெல்லியில் வாக்காளராக பதிவு செய்ய படிவம் 6 மூலம் விண்ணப்பித்திருந்தார். 7 நாட்கள் கட்டாய சரிபார்ப்புக்கு பிறகு செப்.2 அன்று அது முறைப்படி அங்கீகரிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் சாஃப்ட்வேர் தானாகவே பட்டியலை உடனுக்குடன் புதுப்பிப்பதால்தான் இந்த எண்ணிக்கை மாற்றம் நடந்தது" என்று கூறியுள்ளார்.

    ஆனால் என்ன விளக்கம் சொன்னாலும், பஞ்சாப் எம்பியை டெல்லியில் தூக்கி வந்து வாக்காளராக மாற்றியதுக்கு பின்னால் பொலிட்டிக்கல் கேம் இருக்கிறது என்று பலரும் கூறுகின்றனர்.

    English Summary

    Raghav Chadha: BJP MP Raghav Chadha had alleged that the Aam Aadmi Party government removed his name from the voters' list because he is a Punjabi; however, he had quietly registered himself as a voter in Delhi. Criticism against Raghav Chadha has intensified following the revelation of these details.