டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பிரதமர் மோடி தலைமையிலான அரசு பாதுகாப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அவரைப் பாதுகாப்பதன் மூலம் அரசு மிகப்பெரிய தவறைச் செய்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் மக்களுக்கும் மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமார் ஆகியோருக்கும் இடையிலான போராட்டமாக நிலைமை மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. எஸ்ஐஆர் உள்ளிட்ட விவகாரங்களில் தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக செயல்பட்டார் என்பதே குற்றச்சாட்டு! இதை தீவிரமாக முன்னெடுத்து வரும் இந்தியா கூட்டணி, இன்று உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி செல்ல திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னதாக, டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்தியா கூட்டணியின் பேரணியை முன்னிட்டு டெல்லியின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் பேருந்துகள், கலவர தடுப்பு வாகனங்கள், தண்ணீரை பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இது குறித்து கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, "சாலைகளில் 30,000 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். எதற்காக இவ்வளவு பேரை களமிறக்கி இருக்கிறீர்கள்? எதிர்க்கட்சிகளின் பேரணிக்கு இவ்வளவு பெரிய அளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், டெல்லியில் மக்களின் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையும் அவர் விமர்சித்தார். அவர் மேலும், "இன்று ஒட்டுமொத்த டெல்லியும் ஏன் சிறை சாலை போல மாற்றப்பட்டுள்ளது? தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கிறது. மக்களுக்கும் மோடி- அமித் ஷா- ஞானேஷ் குமார் ஆகியோருக்கும் இடையிலான போராட்டம் இது. மோடி அரசு இப்போது மிக பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறது. சாலைகளில் 20,000 முதல் 30,000 போலீசாரை நிறுத்த இருக்கிறார்கள். ஏனென்றால் ஞானேஷ் குமாரின் பாதுகாப்பை உறுதி செய்ய மோடி விரும்புகிறார். ஞானேஷுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு மக்கள் போராட்டத்தில் எளிதாக இருக்கும். நான் ஞானேஷ் குமாருக்கு ஒன்றை மட்டும் சொல்லி கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஒரு குற்றம் செய்துவிட்டீர்கள்.. அப்ரூவராக மாறிவிடுங்கள். நீங்கள் ஒரு குற்றத்தை செய்துள்ளீர்கள். வெளிப்படையாக சொன்னால், நீங்கள் முக்கிய குற்றவாளி அல்ல. நீங்கள் ஒரு தவறைச் செய்துள்ளீர்கள்.. ஆனால் அந்த தவறுக்கு பின்னணியில் மூளையாக செயல்பட்டவர் நீங்கள் அல்ல. நீங்கள் செய்த செயலுக்குப் பின்னணியில் இருந்தவர்களைத்தான் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம். எனவே, அப்ரூவராக மாறிவிடுங்கள்" என்றார். தலைமைத் தேர்தல் ஆணையர் கியனேஷ் குமார் தன்னை தொடர்பு கொள்ள முயல்வதாக தனக்கு தகவல் கிடைத்தாக தெரிவித்த ராகுல் காந்தி, "நான் அவரிடம் சொல்வது ஒன்று தான்.. அப்ரூவராக மாறி ராஜினாமா செய்துவிட்டு விலகிவிடுங்கள். அதுதான் நீங்கள் நாட்டிற்கு செய்யும் சேவையாக இருக்கும். நீங்கள் எத்தகைய அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அப்ரூவராக மாறி ராஜினாமா செய்தால் நாங்கள் உங்களை மன்னிக்கிறோம்" என்றார்.ராகுல் காந்தி
மிக பெரிய தவறு
அப்ரூவராக மாறிவிடுங்கள்
மன்னிக்கிறோம்