மோடி வீட்டை முற்றுகையிட்ட ராகுல் காந்தி! வெளியே வந்து சமாதானம் செய்த அமைச்சர்கள்! திடீர் பரபரப்பு

  • டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர் அமைப்பினர் நடத்திய பேரணி மீது நடத்தப்பட்ட தடி அடியைக் கண்டித்து, டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம் முன்பு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி போராட்டம் செய்தார்.

    Advertisement

    பிரதமர் வீடு முன் காங்கிரஸ் தலைவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தலைமையில் மூத்த தலைவர்கள், எம்பிக்கள் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இதில் பங்கேற்றனர்.

    Advertisement

    பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல்

    டெல்லி லோக் கல்யாண் மார்க் பாதையில் அமைந்துள்ள பிரதமர் இல்லத்தின் வெளிப்பகுதியில் இப்போராட்டம் நடந்தது. காக்ரோச் ஜனதா கட்சியின் மாணவர் அணியினர் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்திய பேரணியில் காவல்துறை கொடூரமான முறையில் தடிஅடி நடத்தியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    மாணவர்களின் கோரிக்கைகளுக்கும், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கும் முறையான பதிலளிக்காத மத்திய அரசைக் கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் உடனடியாகத் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

    Advertisement

    வீதியில் அமர்ந்த தலைவர்கள்

    போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களைத் தனித்தனியாகக் காவல் துறையினர் கைது செய்வதைத் தடுக்கும் வகையில், ராகுல் காந்தி ஜிப் டையை பயன்படுத்தி சங்கிலி போன்ற பட்டைகளைத் தன் கைகளில் கட்டிக் கொண்டு, சக தலைவர்களுக்கும் வழங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரியங்கா காந்தி வத்ரா, கே.சி.வேணுகோபால், பவன் கேரா, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாரிங், தீபேந்தர் ஹூடா உட்படப் பல முக்கிய தலைவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    Advertisement

    ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அமைச்சர்

    போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மத்திய உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகனுடன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்தார். அங்கு தர்ணாவில் ஈடுபட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    காங்கிரஸ் தலைவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அமைச்சர், போராட்டத்தைக் கைவிட்டு அமைதி திரும்புமாறு கேட்டுக்கொண்டார். இருப்பினும், இந்தச் சந்திப்பில் இரு தலைவர்களுக்கும் இடையே பேசப்பட்ட முழுமையான விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

    பிரதமர் இல்லத்தைச் சுற்றி டெல்லி காவல்துறை பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களை அமைத்திருந்தது. கூடுதல் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் போராட்டக் களத்திற்கு வராதபடி பாதைகள் அனைத்தும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன.

    Advertisement

    போராட்டம் நீடித்த நிலையில், காவல்துறையினர் காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றி கைது செய்யத் தொடங்கினர்.

    போராட்டம் குறித்துத் தனதுஎக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று கூறி நாங்கள் பிரதமரின் இல்லத்தை நோக்கி பேரணியாக வந்தோம். இந்த அரசு எந்தப் பொறுப்பையும் ஏற்கத் தயாராக இல்லை..

    நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் அஞ்சுகிறது.. இந்திய நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழித்த பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சரும் உடனடியாகப் பதவி விலக வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    English Summary

    Rahul Gandhi and other Congress Leaders Protest outside PM Modi Residence over NEET Paper Leak