உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி சென்றபோது உடன் வந்தவரை தாக்கிய ராகுல் காந்தி? பரவும் வீடியோ!

  • டெல்லி: ஞானேஷ் குமார் பதவி விலக கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுப்பதற்காக காங்கிரசார் இன்று பேரணியாக சென்றனர். அப்போது ராகுல் காந்தியை நெருங்கி பலரும் முண்டியடித்துக்கொண்டு வந்தனர். இதனால், அப்செட் ஆன ராகுல் காந்தி, தள்ளி செல்லுமாறு கடுகடுத்தார். ஒரு கட்டத்தில், தன்னை ஒட்டி வந்த நபர் ஒருவரை தனது முழங்கையால் ஓங்கி வெகமாக குத்தினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    Advertisement

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி கடந்த ஒரு வார காலமாக காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. இன்று ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு அளிக்க உள்ளதாக ராகுல் காந்தி கூறினார்.

    Advertisement

    முழங்கையால் குத்திய ராகுல் காந்தி

    இதன்படி, இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். இதனால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்தியா கூட்டணி கட்சிகளின் இந்த பேரணியில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அகிலேஷ் யாதவ் கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார், பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்தப் பேரணியில் அகில இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் நேஹா போராவும் பங்கேற்று இருந்தார். உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணியாக சென்ற போது, ராகுல் காந்தியை நெருங்கி பலரும் முண்டியடித்துக்கொண்டு வந்தனர். இதனால், அப்செட் ஆன ராகுல் காந்தி, தள்ளி செல்லுமாறு கடுகடுத்தார். ஒரு கட்டத்தில், தன்னை ஒட்டி வந்த நபர் ஒருவரை தனது முழங்கையால் ஓங்கி வெகமாக குத்தினார்.

    Advertisement

    வீடியோ வைரல்

    இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பேரணியின் போது இளைஞர்கள் சிலர் ராகுல் காந்தியிடம் செல்ஃபி எடுப்பது போன்று உடன் ஓடி வருகின்றனர். அப்போது கூட்ட நெரிசலால் ஒருவரை ஒருவர் இடித்தப்படி வருகின்றனர். இதில் ராகுல் காந்தி மீது ஒருவர் மோதியதை அடுத்து ராகுல் காந்தி முழங்கையால் குத்துகிறார்.

    பேரணியில் கடுமையான நெரிசல் இருந்ததால் முன்னால் சென்ற தங்கை பிரியங்கா காந்தியையும் ராகுல் காந்தி பாதுகாப்பாக அழைத்து சென்றார். ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்களை போலீசார், பகவான் தாஸ் சாலை அருகே தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து ராகுல் காந்தி மற்றும் பிற தலைவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர்.

    Advertisement

    அங்கே அவர்களது வழக்கறிஞர்கள் குழு, மனு தாக்கலுக்கான நடைமுறையை முடித்து கொடுத்தனர். எஸ்.ஐ.ஆர் விவகாரம் குறித்தும், தேர்தல் ஆணைய விவகாரத்தில் தலையிடுமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த மனுவை நாளை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்று தெரிகிறது.

    English Summary

    Rahul Gandhi: Congress members marched today to file a petition in the Supreme Court demanding the resignation of Gyanesh Kumar. Amidst the crowd, several people jostled to get close to Rahul Gandhi. Visibly upset by this, Rahul Gandhi snapped at them to move away; at one point, he even delivered a sharp, forceful elbow jab to a person who had crowded too close to him. Video footage of the incident is currently circulating rapidly on social media.