பிரியங்காவை ஓரம் காட்டிய ராகுல் காந்தி.. டெல்லி ராம்லீலாவில் பார்த்தீங்களா? கொளுத்தி போடும் பாஜக

  • டெல்லி: பிரியங்கா காந்தியை தலைவராக முன்னிறுத்தினால், நம்மை ஓரம் கட்டிவிடுவார்கள் என்று ராகுல் காந்தி அஞ்சுகிறாரா?.. இதன் காரணமாக பிரியங்கா காந்தியின் வாக்கும் காந்தி குடும்பத்தில் திருடப்பட்டுள்ளதா? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தின் மேடையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசவில்லை. இதனை சுட்டிக்காட்டி பாஜக இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

    Advertisement

    லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது தங்கையும், காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான பிரியங்கா காந்தி வத்ராவை ஓரங்கட்டுவதாக பாஜக விமர்சித்துள்ளது. ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நேற்று இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

    Advertisement

    டெல்லி மிண்டோ சாலையில் இருந்து ராம்லீலா மைதானம் வரை பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பேரணி டெல்லி ராம்லீலா மைதானம் வந்ததும் அங்கு போடப்பட்டு இருந்த மேடையில் ஏறிய இந்தியா கூட்டணி கட்சியினர் பேசினர். ஞானேஷ் குமாருக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

    ராகுல் காந்தி அஞ்சுகிறாரா?

    இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசவில்லை. இதனை சுட்டிக்காட்டி பாஜக விமர்சனத்தை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:-

    Advertisement
    மத்திய அரசை கவிழ்க்க சதி! பகீர் கிளப்பிய ஜேபி நட்டா.. டெல்லி பேரணியால் ராகுல் காந்திக்கு வார்னிங்

    காந்தி குடும்பத்திற்கு உள்ளாகவே பிரியங்கா காந்தியின் வாக்கு திருடப்பட்டுள்ளது. மாதிரி பாராளுமன்ற கூட்டம் மற்றும் ராம்லீலா மைதான போராட்டத்தில் பிரியங்கா காந்தி அதிருப்தி அடைந்துள்ளார். பிரியங்கா காந்தியை தலைவராக முன்னிறுத்தினால், நம்மை ஓரம் கட்டிவிடுவார்கள் என்று ராகுல் காந்தி அஞ்சுகிறாரா? இதன் காரணமாக பிரியங்கா காந்தியின் வாக்கும் காந்தி குடும்பத்தில் திருடப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    பிரியங்கா காந்திக்கு 2-வது வரிசையில் இருக்கை

    இதே குற்றச்சாட்டை பாஜகவின் மற்றொரு செய்தி தொடர்பாளரான பிரதீப் பண்டாரியும் முன்வைத்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்து வரும் பிரியங்கா காந்தி இன்று ராம்லீலா மைதானத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை.. பிரியங்கா காந்தி பேசுவதை ராகுல் காந்தி தடுத்தாரா? இன்று மட்டுமல்ல, நேற்றும் நடைபெற்ற மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தின்போதும், ராகுல் காந்தியை தான் முன்னிலைப்படுத்தினார்கள்.

    Advertisement
    சாலையில் படுத்த பிரியங்கா காந்தி.. ராகுல் தலைமையில் டெல்லியை திணறடித்த எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது

    பிரியங்கா காந்திக்கு 2-வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது. அங்கும் அவரைப் பேச அனுமதிக்கவில்லை. பிரியங்கா காந்தி டீமை பார்த்து ராகுல் முகாம் பயப்படுகிறதா? பிரியங்கா காந்தி தரப்பினர் ஓரம் கட்டப்படுகிறார்கள். ராகுல் காந்தியை 100-வது முறையாக மீண்டும் முன்னிலைப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. நாட்டின் மக்களைப் பற்றியோ, காங்கிரஸ் கட்சியைப் பற்றியோ பேசவில்லை. மாறாக, பிரியங்கா காந்தி வத்ராவை ஓரங்கட்டுவதிலேயே ராகுல் காந்தி கவனம் செலுத்துகிறார்" என்றார்.

    யார் யார் பங்கேற்றனர்

    டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தின் மேடையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி. ராஜா, மார்க்கிஸ்ட் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, சிவசேனா எம்.பி அரவிந்த் சாவந்த் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். இது தவிர காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் இறுதியாக ராகுல் காந்தி உரையாற்றினார்.

    English Summary

    Rahul Gandhi afraid that if Priyanka Gandhi is projected as the leader, he himself will be sidelined? Has Priyanka Gandhi’s political voice been suppressed within the Gandhi family for this reason? The BJP has raised these questions. Congress General Secretary Priyanka Gandhi did not speak on stage during the INDIA alliance meeting held in Delhi yesterday; the BJP has leveled this criticism by pointing to that fact.