2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி!

  • டெல்லி: நேற்று முன்தினம் டெல்லியில், இந்திய கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் சார்பில் பங்கேற்றிருந்த எம்பி ஜான் பிரிட்டாஸ், திமுகவை காங்கிரஸ் கழற்றிவிட்டது குறித்து சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

    Advertisement

    இந்திய கூட்டணி உருவாக்கப்படும்போது அதன் நிறுவன தலைவர்களில் ஒருவராக மு.க.ஸ்டாலின் இருந்தார். ஆனால், இந்தியா கூட்டணி கூட்டதில் திமுக பங்கேற்கவில்லை.

    Advertisement

    காரணம் இதுதான்

    காரணம், தமிழகத்தில் தவெக அரசுக்கு காங்கிரஸ் அளித்த ஆதரவுதான். திமுக கூட்டணியில் இருந்த இடதுசாரிகள், விசிக மற்றும் ஐயுஎம் உள்ளிட்ட கட்சிகள் கூட தவெகவுக்கு ஆதரவளித்தன. ஆனால், இந்த கட்சிகள் மீது திமுகவுக்கு பெரிய அதிருப்தி இல்லை. இதில் காங்கிரஸ் மீது மட்டும்தான் கடும் கோபத்தில் உடன் பிறப்புகள் இருக்கிறார்கள்.

    கூட்டணி தர்மம்

    தவெக பெரும்பான்மை இல்லாமல் இருந்தபோது, அக்கட்சிக்கு ஆதரவளித்து விஜய்யை முதலமைச்சராக்குவது என்கிற நிலைப்பாட்டிற்குள் இடதுசாரிகள் வந்தனர். இவர்கள் திமுக கூட்டணியில் இருந்ததால், அக்கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாலோசித்து தங்கள் முடிவை அறிவித்தனர். இதுதான் கூட்டணி தர்மம். ஆனால், காங்கிரஸ் இப்படி எந்த ஆலோசனையும் செய்யவில்லை. தேர்தல் வெற்றி நிலவரம் மாறியவுடன் பனையூருக்கு பாய்ந்து ஓடியது. இதுதான் திமுகவின் அதிருப்திக்கு காரணம். மட்டுமல்லாது திமுகவை பற்றி காங்கிரஸ் தலைவர்கள் வைத்த விமர்சனங்கள் இந்த அதிருப்தியை அதிகரித்தது.

    Advertisement

    இப்படி இருக்கையில், ஜூன் 8ம் தேதி நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில், இது குறித்து சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ் சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தார்.

    நறுக் கேள்வி எழுப்பிய ஜான் பிரிட்டாஸ்

    "கேரளாவில் காங்கிரஸும் இடதுசாரிகளும் அரசியல் ரீதியாக மோதுவதில் எங்களுக்குப் பிரச்சினையில்லை. ஆனால், தேசிய அளவில் 'INDIA' கூட்டணியின் முகமாக இருக்கும் ராகுல் காந்தியும், கார்கேவும் கேரளாவிற்கு வந்து 'இடதுசாரிகள் பாஜகவுடன் கைகோர்த்துள்ளனர்' என்று பேசுவது கூட்டணியின் நோக்கத்தையே சிதைக்கிறது. பாஜகவை எதிர்ப்பதற்கு எங்களுக்கு உங்களிடம் இருந்து சான்றிதழ் தேவையில்லை.

    வெறும் 2 அமைச்சர் பதவிக்காக

    மறுபுறம், தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் அல்லது மத்திய அமைச்சரவையில் வெறும் 2 அமைச்சர் பதவிகளைப் பெறுவதற்காக மட்டுமே காங்கிரஸ் கட்சி தங்களின் நீண்டகால விசுவாசக் கூட்டணியான திமுகவை விட்டு வெளியேறியுள்ளது. வெறும் தற்காலிகப் பதவி ஆசைக்காக, 'INDIA' கூட்டணியின் தென்மண்டலப் பெரும் தூணாக விளங்கிய திமுக-வை காங்கிரஸ் கழற்றிவிட்டது ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கே இழைக்கப்பட்ட துரோகம், இது ஏற்க முடியாத ஒன்று" என்று விமர்சித்திருந்தார்.

    Advertisement

    இந்தியா கூட்டணியில் சலசலப்பு

    ஜான் பிரிட்டாஸ் மற்றும் இடதுசாரிகள் எழுப்பிய திமுக விவகாரத்தை சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் வழிமொழிந்து காங்கிரஸிற்குத் தங்களின் பலத்த கண்டனத்தைப் பதிவு செய்தனர். இதனால் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டிருந்தது.

    காங்கிரஸுக்கு எச்சரிக்கை மணி

    இனியாவது இந்தியா கூட்டணியை பலப்படுத்த திமுகவுடன் சமரச போக்குக்கு காங்கிரஸ் இறங்கி வருமா? என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. அப்படி வரவில்லை எனில், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகா் மாநிலங்களிலும் தங்களை காங்கிரஸ் சுயலாபத்திற்காக பயன்படுத்திக்கொள்கிறது என்று அகிலேஷ் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் உணர தொடங்குவார்கள். அது காங்கிரஸின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Rahul Gandhi: A meeting of the INDIA alliance parties took place in Delhi the day before yesterday. MP John Brittas, representing the CPM at the meeting, raised a barrage of questions regarding the Congress party dropping the DMK.