பிரதமர் மோடி செய்த தவறு.. மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! நீட் விவகாரத்தில் ராகுல் ஆவேசம்

  • டெல்லி: நீட் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் மாணவர் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். பிரதமர் மோடி மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்..

    Advertisement

    டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியினர் தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நீட் குளறுபடிகளுக்கு தார்மீக பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே மாணவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது. மேலும், அத்தோடு கல்வி அமைப்பில் சீர்திருத்தம், குளறுபடிகளால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு ஆகியவற்றை முன்வைத்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

    Advertisement

    ராகுல் காந்தி

    இந்தச் சூழலில் தான் தான் மாணவர்கள் அமைப்பின் தலைவர்கள் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ராகுல் காந்தி, "மாணவர்களுக்கு மூன்று கோரிக்கைகள் உள்ளன. அந்த மூன்றிலும் எந்த சமரசத்துக்கும் இடமில்லை. ஊழல் நிறைந்த, திறமையற்ற கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பது தான் முதல் கோரிக்கை!

    ஏற்கவே முடியாது

    தர்மேந்திர பிரதான் என்பது ஊழலின் அடையாளம் மட்டுமல்ல, மாணவர்களின் எதிர்காலத்தை அழித்தவர். அவரை இன்னொரு அமைச்சகத்துக்கு மாற்றுவது பற்றி எந்த பேச்சுக்கும் இடமில்லை. அவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அதுதான் ஒரே தீர்வு" என்றார். ராகுலின் இந்த பேச்சுக்கு பிறகே தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது குறித்த அறிவிப்பு வெளியானது.

    Advertisement

    தண்டனை தேவை

    கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய பேரணியின்போது போலீசார் தடியடி நடத்தியது, கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் பிளாஸ்டிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் குறித்தும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். அதில் அவர், "அமைதியாக போராடிய மாணவர்கள் மீது தேவையற்ற வன்முறையை கட்டவிழ்த்து விட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களை தாக்கியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர்கள் சட்டத்தின் முன் பொறுப்பேற்க வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடியும் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! நரேந்திர மோடி இந்தியாவின் கடந்த காலம். ஆனால் மாணவர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம். கடந்த காலம் ஒருபோதும் எதிர்காலத்தை வெல்ல முடியாது. எனவே மாணவர்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

    Advertisement

    வெளியான தகவல்

    மாணவர்கள் முன்வைத்த மூன்று முக்கிய கோரிக்கைகளில் இரண்டை ஏற்க மத்திய அரசு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், தர்மேந்திர பிரதானின் ராஜினாமா விவகாரத்தில் மட்டும் மத்திய அரசு பின்வாங்க ரெடியாக இல்லை என தகவல் வெளியானது. தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வது மோடி அரசின் இமேஜை பாதிக்கும் என்பதால் அதற்கு அவர்கள் ரெடியாக இல்லை என சொல்லப்பட்டது.. அதிகபட்சம் தர்மேந்திர பிரதான் வேறு ஒரு துறைக்கு மாற்றப்படுவார் என சொல்லப்பட்டது.

    இருப்பினும், ராஜினாா செய்தால் தான் பேச்சுவார்த்தைக்கே வருவோம் என்பதில் மாணவர்கள் உறுதியாக இருந்தனர். மேலும், டெல்லி மட்டுமின்றி, நாட்டின் பல முக்கிய பகுதிகளுக்கும் போராட்டம் பரவியது. இதனால் நிலைமை கையைவிட்டு போவதை உணர்ந்தே மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது.

    English Summary

    Congress leader Rahul Gandhi demanded that Prime Minister Narendra Modi apologise to students over the NEET protest(நீட் போராட்டம் குறித்து ராகுல் காந்தி): Rahul Gandhi latest news in tamil.