டெல்லி: டெல்லியில் மாணவர் போராட்டத்தின் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி ராகுல் காந்தி நேரடியாக போலீஸ் நிலையம் சென்றுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்த நிலையில், அவர் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்த மாணவர் போராட்டத்தில் பாதுகாப்பு படையினர் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியதாக சர்ச்சை வெடித்துள்ளது. அந்த தாக்குதலில் சிலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை கிளப்பியிருந்தது.
இதற்கிடையே ஜூலை 20ஆம் தேதி நடைபெற்ற மாணவர் போராட்டத்தின்போது பெல்லட் குண்டு தாக்குதலில் காயமடைந்த 19 வயது இளைஞருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டெல்லி காவல் நிலையத்துக்கு நேரில் சென்றார். பெல்லட் குண்டு விவகாரத்தில் புகார் அளித்தும் எஃப்ஐஆர் பதிவு செய்ய போலீசார் மறுப்பதாக அந்த இளைஞர் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அவருக்கு ஆதரவாக ராகுல் காந்தி போலீஸ் நிலையத்திற்கு சென்றார். இருப்பினும், போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ராகுல் காந்தி அங்கு போலீஸ் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். ராகுல் காந்தியுடன் அங்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், வழக்குப்பதிவு செய்யும் வரை அங்கிருந்து நகர போவதில்லை என ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெல்லட் குண்டு தாக்குதலில் சாஹில் லோசாப் என்ற அந்த இளைஞர் காயமடைந்தார். அந்த இளைஞர் உடன் தான் ராகுல் காந்தி காவல் நிலையத்துக்குள் சென்றனர். ராகுல் காந்தி திடீரென போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்ததால் அஹ்கு பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுத்ததாக கூறப்பட்ட நிலையில், ராகுல் காந்தி காவல் நிலையத்திற்கு வெளியே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பெல்லட் குண்டு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. ஜூலை 20ஆம் தேதி மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றபோது வன்முறை ஏற்பட்டது. நீட் லீக் விவகாரத்தை முன்வைத்து, கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. டெல்லி போலீசார் பெல்லட் குண்டுகள் பயன்படுத்துவதில்லை என விளக்கம் அளித்தனர். அதேநேரத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை இந்த விவகாரம் குறித்து இதுவரை தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. மேலும், போலீசார் பயன்படுத்தவில்லை என்றாலும் ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் வீரர்கள் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. போராட்டத்துக்கு பிறகு காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களது காயங்கள் தொடர்பான தகவல்கள் வெளியானதை தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையானது.ராகுல் காந்தி
தர்ணா
என்ன நடந்தது
பின்னணி